பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 96 

   (இ - ள்.) மன்நாக இணைப்படமுந் தேர்த்தட்டும் பொன் ஆலவட்டமும்போல் - பெருமை பொருந்திய அரவின் இருபுறமும் ஒத்த படமும் தேரின் தட்டும் பொன்னாலாகிய ஆலவட்டமும் போல; கலை இமைக்கும் அகல் அல்குல் - மேகலை ஒளிரும் வட்டம் அகன்ற அல்குல்; கொன்இளம் பருதியும் குறுமுயலின் குருதியும் போன்று இன் அரத்தப்பட்டு அசைத்து - காலையில் தோன்றும் இளஞாயிறும் சிறு முயலின் இரத்தமும்போலே கண்ணுக்கினிய செம்பட்டுடுக்கப்பட்டு ; மதிமயக்கி இந்திரற்கும் புகழ்வு அரிது - எல்லோரையும் மதிமயக்குதலின் இந்திரனுக்கும் புகழ்தல் இயலாது.

 

   (வி - ம்.) கொன் - விடியற்காலம். 'கொன்வரல் வாழ்க்கை' (புறநா. 379 - 11)போல. இந்திரற்கும் : உம்: உயர்வு சிறப்பு.

( 144 )
174 வேழவெண் டிரடடக்கை வெருட்டிமற் றிளங்கன்னி
வாழைத்தண் டெனத்திரண்டு வாலரக்குண் செம்பஞ்சி
தோழமைகொண் டெனமென்மை யுடையவா யொளிதிகழ்ந்து
மாழைகொண் மணிமகரங் கௌவிவீற் றிருந்தனவே.

   (இ - ள்.) வேழவெண் திரள் தடக்கை வெருட்டி - (ஒழுங்காகக் காணப்படுதலின்) வெள்ளை யானையின் திரண்ட துதிக்கையைஅஞ்சுவித்த துடை; இளங்கன்னி வாழைத் தண்டெனத் திரண்டு - இளமை பொருந்திய குலைதள்ளாத வாழையின் தண்டு போலத் திரண்டு; வால்அரக்கு உண் செம்பஞ்சி தோழமை கொண்டு என - தூய செந்நிறப் பஞ்சியின் நட்பைக் கொண்டாற்போல ; மென்மை யுடையவாய் - மென்மை பெற்றனவாய்; ஒளி திகழ்ந்து - ஒளிபெற்று; மாழைகொள் மணிமகரம் கௌவி வீற்றிருந்தன - பொன்னிற் பதித்த மணிகளாலான மகரவடிவான குறங்குசெறி என்னும் அணி கௌவி மேலாயிருந்தன.

 

   (வி - ம்.) வெருட்டி : (துடைகளை உணர்த்தியதாற்) பெயர். மற்று: வினைமாற்று. செம்பஞ்சி : பஞ்சி மாத்திரை ; 'அரக்கு உண்' என நிறங்கூறினதால். பொன் தன்னிடத்தே அடக்கின மணி. மகரம்: உவமையாகுபெயர். (குறங்கு செறி: ஓர் அணிகலன்.)

 

   'திரண்ட' என்பது பாடமாயின் பெயராம்.

( 145 )
175 பக்கத்தாற் கவிழியவாய் மேல்பிறங்காப் பாண்டிலா
ஒக்கநன் குணராமை பொருந்திய சந்தினவாய்
நெக்குப்பின் கூடாது நிகரமைந்த முழந்தாளு
மக்களுக் கில்லாத மாட்சியின் மலிந்தனவே.

   (இ - ள்.) மேல் பக்கத்தால் கவிழியவாய் - மேற்பக்கத்திலே கவிழ்ச்சியை உடையனவாய்; பிறங்காப் பாண்டில்ஆ