பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 961 

1689 ஒண்மணிக் குழைவில் வீச
  வொளிர்ந்துபொன் னோலை மின்ன
வண்ணமே கலைக ளார்ப்ப
  வான்சிலம் பொலிப்ப முத்துங்
கண்ணியும் பசும்பொ னாணுங்
  கதிர்முலை புடைப்பக் காம
ரண்ணலங் குமரன் றன்னொ
  டாயிழை யாடி னாளே.

   (இ - ள்.) ஒண் மணிக் குழை வில்வீச - சிறந்த மணிக்குழை ஒறி வீச; பொன் ஓலை ஒளிர்ந்து மின்ன - பொன்னாலாகிய ஓலை கதிர் விட; வண்ணம் மேகலைகள் ஆர்ப்ப - அழகிய மேகலைகள் ஒலிக்க; வான் சிலம்பு ஒலிப்ப - சிறந்த சிலம்பு ஒலிக்க; முத்தும் கண்ணியும் பசும் பொன் நாணும் கதிர்முலை புடைப்ப - முத்துமாலை முதலியவை கதிர்த்த முலையைப் புடைப்ப; காமர் அண்ணல் அம்குமரன் தன்னொடு ஆயிழை ஆடினாள் - விருப்பூட்டும் அண்ணலாகிய சீவகனோடு கனகமாலை ஆடினாள்.

   (வி - ம்.) குமரனோடு ஆயிழை ஆடினாள் எனவே, ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தாய் இருவரும் ஆடினார் என்பது பட நின்றது. எனவே, அவன் வண்ண மேகலை ஆர்ப்பச் சிலம்பு ஒலிப்ப ஆடினானென்றும் அவள் வீச மின்னப் புடைப்ப ஆடினாளென்றுங் கொள்க, இவன் காட்டக் கண்டாளென வேண்டுதலின்.

( 133 )
1690 மூசுதேன் வாரி யல்குற்
  பட்டபின் முலைக ளென்னு
மாசறு கந்தின் மென்றோண்
  மணித்தொடர்க் கொளுத்தி வாட்க
ணாசறு வயிரத் தோட்டி
  நுதலணிந் தமுதச் செவ்வாய்
காசறு கவள மாகக்
  களிறுகோட் பட்ட தன்றே.

   (இ - ள்.) களிறு - சீவகனாகிய களிறு; மூசு தேன் அல்குல் வாரி - தேன் மொய்க்கும் அல்குலாகிய கூடத்திலே; அமுதச் செவ்வாய் காசு அறு கவளம் ஆகப் பட்டபின் - அமுதனைய செவ்வாய் குற்றம் அற்ற கவளமாகக் கொண்டு அகப்பட்டபின்; முலைகள் என்னும் மாசு அறு கந்தின் - தன் முலைகளாகிய குற்றமற்ற கம்பத்திலே; மென்தோள் மணித் தொடர்க் கொளுத்தி - மெல்லிய தோளாகிய மணிகளிழைத்த சங்கிலியாலே பூட்டி; வாள் கண்