கனகமாலையார் இலம்பகம் |
962 |
|
|
ஆசு அறு வயிரத் தோட்டி நுதல் அணிந்து - வாளனைய கண்ணாகிய வயிரத்தோட்டியை நுதலில் அணிந்து; கோட்பட்டது - பிணிக்கப்பட்டது.
|
(வி - ம்.) களிறு வாரியிற்பட்டபின் கந்தின் தொடர்கொளுத்தி கோட்டி நுதலணிந்து கவளம் கொடுப்பக் கோட்பட்டது என்க. களிறு - சீவகனுக் குவமை வாரி - யானை அடக்குமிடம்; இஃதல்குற்குவமை. கந்து - யானை கட்டுந்தறி; இது முலைக்குவமை. தொடர் - சங்கிலி; இது தோட்குவமை. தோட்டி - அங்குசம்; இது கண்ணுக்குவமை. செவ்வாய் என்றது வாலெயிறூறிய நீரினை : ஆகுபெயர். கவளம் யானைக்கிடும் உணவு.
|
( 134 ) |
1691 |
ஒப்பிணை தனக்கி லாதா னுறுவரை யகல மூழ்கிச் | |
|
செப்பிணை யனைய செங்கேழ் வனமுலை பொருதுசேப்பக் | |
|
கற்பக மரத்தைப் புல்லிக் கைவிடா தொழிந்து காமத் | |
|
துப்புர வுமிழுங் காம வல்லியின் றோற்ற மொத்தாள். | |
|
(இ - ள்.) தனக்கு ஒப்பு இணை இலாதான் உறுவரை அகலம் - தனக்கு உவமையாகிய இணை இல்லாத சீவகனின் பெருவரை அனைய மார்பிலே; செப்பு இணை அனைய செங்கேழ் வனமுலை பொருது மூழ்கிச் சேப்ப - தன்னுடைய இணையான செப்புப் போன்ற சிவந்து ஒளிரும் அழகிய முலைகள் பொருது புதைந்து சிவக்குமாறு; கற்பக மரத்தைப் புல்லிக் கைவிடாது ஒழிந்து - கற்பக மரத்தைத் தழுவிக் கைவிடாமல் தங்கி; காமத் துப்புரவு உமிழும் காம வல்லியின் தோற்றம் ஒத்தாள் - அம்மரத்திற்குக் காமமாகிய நுகர்பொருள்களை நல்குகின்ற ஒரு காம வல்லியின் தோற்றத்தை ஒத்தாள்.
|
(வி - ம்.) கற்பக மரத்திற்குத் துப்புரவு நல்கும் காமவல்லி : இல் பொருளுவமை.
|
அகலம் - மார்பு, செங்கேழ் - சிவப்புநிறம், வனமுலை - அழகிய முலை, சேப்ப - சிவப்ப, துப்புரவு - நுகர்பொருள். காமவவல்லி - கற்பகத்தின்மேற் படருமொரு பொன்னிறமுடைய கொடி.
|
( 135 ) |
1692 |
காய்வுறு வேட்கை தன்னாற் | |
|
கங்குலும் பகலும் விள்ளான் | |
|
வேய்வெறுத் தமைந்த தோளாள் | |
|
விழுத்திரை யமுத மென்று | |
|
சேய்நலங் கடந்த செல்வன் | |
|
றிருநலந் தெளித்திட் டாற்ற | |
|
வாய்விடாள் பருகி யிட்டாண் | |
|
மடக்கிள்ளை மருட்டுஞ் சொல்லாள். | |
|