கனகமாலையார் இலம்பகம் |
964 |
|
|
|
(இ - ள்.) வாளினால் மிடைந்த கண்ணாள் - வாளாலே போர் செய்யப்பட்ட கண்ணாளின்; வரும் முலைத் தடத்துள்வைகி - வளரும் முலையாகிய தடத்திலே தங்கி; தோளினால் மிடைந்து புல்லி - தோளினாலே நெருங்கத் தழுவி; தொண்டை வாய் அமுதம் மாந்தி - கொவ்வைக் கனி அனைய வாயின் அமுதத்தை நுகர்ந்து; காளை செல்கின்ற நாளுள் சீவகன் வாழ்கின்ற நாளிலே; கட்டியங்காரன் மூதூர் - கட்டியங்காரனுடைய இராசமா புரத்திலே; மீளிவேல் குருசிற்கு உற்றார்க்கு உற்றது விளம்பல் உற்றேன் - சிறந்த வேலையுடைய சீவகனுடைய சுற்றத்தார்க்கு நேர்ந்ததை உரைக்கத் தொடங்கினேன்.
|
(வி - ம்.) மிடைந்த கண் - மிடையப்பட்ட கண். கண்ணாள் : கனகமாலை. வருமுலை : வினைத்தொகை. மிடையப் புல்லி என்க. தொண்டை - கொவ்வைக்கனி. மாந்தி - பருகி. காளை : சீவகன். மூதூர் - ஈண்டு. இராசமாபுரம். மீளிவேல் - தலைமைத் தன்மையுடைய வேல். உடையான்றன்மை உடைமைமேனின்றது.
|
( 138 ) |
1695 |
வெண்மதி யிழந்த மீன்போல் | |
|
விடலைக்குத் தம்பி மாழாந் | |
|
தொண்மதிச் சூழ்ச்சி மிக்கா | |
|
னுள்ளுழி யுணர்தல் செல்லான் | |
|
புண்மதித் துடைந்த போது | |
|
பொழிந்துமட் டொழுகு நன்னாட் | |
|
டுண்மதி வருந்த நாடி | |
|
யொளிநக ரெய்தி னானே. | |
|
(இ - ள்.) விடலைக்குத் தம்பி வெண்மதி இழந்த மீன்போல் மாழாந்து - சீவகனுக்கு இளையானாகிய நந்தட்டன் திங்களைப் பிரிந்த உரோகிணி போலே மயங்கி; ஒண் மதிச் சூழ்ச்சி மிக்கான் உள்ளுழி உணர்தல் செல்லான் - சிறந்த அறிவின் சூழ்ச்சியிலே சிறந்தானுடைய இருப்பிடம் அறியானாகி; புள் மதித்து உடைந்த போது மட்டுப் பொழிந்து ஒழுகும் நன்னாட்டு - வண்டுகள் குடைதலால் விரிந்த மலர்கள் தேனைப் பொழிந்து ஒழுகும் நல்ல நாட்டிலே; உள்மதி வருந்த நாடி - அறிவு வருந்தத் தேடி; ஒளி நகர் எய்தினான் - பிறகு ஒளியை யுடைய நகரத்தை அடைந்தான்.
|