கனகமாலையார் இலம்பகம் |
965 |
|
|
(வி - ம்.) நகா - குணமாலையின் வீடு என்பர் நச்சினார்க்கினியர்.
|
விடலைக்குத் தம்பி என்றது நந்தட்டனை. மாழாத்தல் - மயங்குதல். சூழ்ச்சி மிக்கான் : சீவகன். புள், ஈண்டு வண்டு. மதித்தல் - குடைதல். மட்டு - தேன். மதி உள்வருந்த என்க.
|
( 139 ) |
1696 |
வெள்ளிவெண் மலைக்கு வேந்த | |
|
னொருமகள் வேற்கட் பாவை | |
|
யொள்ளிழை யவளைக் கேட்பா | |
|
னுறுவலி செல்லு மாங்கண் | |
|
வள்ளிதழ்க் கோதை தானே | |
|
யிட்டதோர் வண்ணந் தன்னைக் | |
|
கொள்ளத்தான் முரல லுற்றுக் | |
|
கோலமை வீணை கொண்டாள். | |
|
(இ - ள்.) வெள்ளி வெண் மலைக்கு வேந்தன் ஒரு மகள் - வெள்ளி மலைக்குத் தலைவனான கலுழவேகன் மகளாகிய; வேல் கண் பாவை ஒள்ளிழை அவளைக் கேட்பான் - வேலனைய கண்களையுடைய பாவையும் ஒளியிழைகளை அணிந்தவளுமான தத்தையைக் கேட்பதற்கு; உறுவலி செல்லும் ஆங்கண் - மிகு வலியுடைய நந்தட்டன் செல்லும்போது; வள் இதழ்க் கோதை தானே இட்டது ஓர் வண்ணம் தன்னை - வளவிய இதழையுடைய மலர்க் கோதையாள் தானே அமைத்ததொரு வண்ணத்தை; கொள்ளத் தான் முரலல் உற்றுக் கோல் அமை வீணை கொண்டாள் - தன் மனங் கொள்ளத் தானே பாடத் தொடங்கி நரம்பையுடைய யாழைக் கையிற் கொண்டாள்.
|
(வி - ம்.) வெள்ளி வெண்மலை என்புழி வெண்மை இயல்படை. வேந்தன்; கலுழவேகன். ஒரு மகளும் வேற்கட்பாவையும் ஒள்ளிழையவளும் ஆகிய காந்தருவதத்தை என்க. கேட்பான் - கேட்டற்கு. உறுவலி: அன்மொழித் தொகை. வண்ணம் - பாடல். கோல் - நரம்பு
|
( 140 ) |
1697 |
ஆடகச் செம்பொ னாணி யானெய்வார்ந் தனைய திண்கோன் | |
|
மாடக நொண்டு கொண்டு மாத்திரை நிறைய வீக்கிச் | |
|
சூடக மணிந்த முன்கைத் தொகுவிரல் சேப்ப வெற்றித் | |
|
தோடலர் கோதை கீதந் துணிவினிற் பாடுகின்றாள். | |
|
(இ - ள்.) தோடு அலர் கோதை - இதழ் விரிந்த மலர் மாலையாள்; ஆடகச் செம்பொன் ஆணி ஆன்நெய் வார்ந்த அனைய திண்கோல் - ஆடகப் பொன்னால் ஆன ஆணியிற் கட்டின ஆவின் நெய் ஒழுகினாற் போன்ற திண்ணிய நரம்பினை; மாடகம் நொண்டு கொண்டு - முறுக்காணியினாலே முகந்து
|