பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 966 

கொண்டு; மாத்திரை நிறைய வீக்கி - சுருதியின் அளவை மிகுத்துக் கட்டி; சூடகம் அணிந்த முன்கைத் தொகுவிரல் சேப்ப எற்றி - வளையல் அணிந்த முன்கையில் குவிந்த விரல் சிவக்குமாறு தெறித்துப் பார்த்து; கீதம் துணிவினில் பாடுகின்றாள் - இசையைத் தெளிவுடன் பாடுகின்றாள்.

   (வி - ம்.) ஆடகச் செம்பொன் நால்வகைப் பொன்னில் ஒன்று. திண்கோல் - திண்ணிய நரம்பு. மாடகம் - முறுக்காணி. நொண்டு கொண்டு : ஒரு சொல்; முகந்துகொண்டென்க. சூடகம் - ஒருவகை வளையல். தொகுவிரல் : வினைத்தொகை. கோதை : காந்தருவதத்தை; துணிவு - தெளிவு.

( 141 )

வேறு

1698 இறுமருங்குல் போதணியி னென்றினைந்து கையி
னறுமலர்கள் சிந்துவார் நண்ணார் துறந்தார்
நண்ணார் துறப்ப நனிவளையுந் தோடுறப்பக்
கண்ணோவா முத்துறைப்பத் தோழி கழிவேனோ.

   (இ - ள்.) தோழி! - தோழியே!, மருங்குல் போது அணியின் இறும் என்று இனைந்து - இடை மலரணியினும் ஒடியும் என்று வருந்தி; கையின் நறுமலர்கள் சிந்துவார் நண்ணார் துறந்தார் - கையில் உள்ள நல்ல மலர்களைக் கீழே போகடுவாராகிய காதலர் இப்போது அணுகாமல் நீங்கினார்; நண்ணார் துறப்ப வளையும் தோள் நனி துறப்ப - (இங்ஙனம்) அவர் அணுகாராய்க் கைவிட, வளைகளையும் தோள்கள் அறவே நீங்க; கண் ஓவா முத்து உறைப்பக் கழிவேனோ? - கண்கள் ஒழிவின்றிக் கண்ணீராகிய முத்துக்களைச் சிந்த இங்ஙனம் காலம் கழிப்பேனோ? கழியாத தொரு நாளும் வருமோ?

   (வி - ம்.) ஓ : வினா.

   போது அணியின் மருங்குல் இறும் என்று மலர் சிந்துவார் என மாறுக. சிந்துவார் என்றது சீவகனை' நண்ணார்: முற்றெச்சம். இது முதல் மூன்று செய்யுளும் தலைவி தன் ஆற்றாமையைத் தோழிக்குக் கூறல் என்னும் அகத்துறை பற்றிய செய்யுள். முத்து கண்ணீர்க்கு ஆகுபெயர். உறைத்தல் - துளித்தல். இவற்றைத் தாழிசைக் கொச்சக ஒருபோகென்பர் நச்சினார்க்கினியர்.

( 142 )
1699 பூமாலை சூடிற் பொறையாற்றா நுண்மருங்கு
லேமாரா தென்றினைவா ரெண்ணார் துறந்தா
ரெண்ணார் துறப்ப வினவளையுந் தோடுறப்ப
மணணார்வேற் கண்டுயிலா தோழி மருள்வேனோ.

   (இ - ள்.) தோழி - தோழியே!; பொறை ஆற்றா நுண்மருங்குல் பூமாலை சூடின் - முலைச் சுமையைச் சுமக்கவியலாத