பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 967 

நுண்ணிய இடை மலர்மாலையையும் அணிந்தால்; ஏம் ஆராது என்று இனைவார் - இன்பம் நிறையாமல் இறும் என்று வருந்தும் காதலர்; எண்ணார் துறந்தார் - என்னை நினையாராய்க் கைவிட்டார்; எண்ணார் துறப்ப இனவளையும் தோள் துறப்ப - இங்ஙனம் அவர் நினையாமல் துறப்பத் தொகுதியான வளைகளும் தோளினின்றும் நழுவ; மண் ஆர் வேல் கண் துயிலா மருள்வேனோ? - மஞ்சனம் ஆடுதல் பொருந்திய வேலனைய கண்கள் உறங்காமல் மயங்குவேனோ?

   (வி - ம்.) ஏம் - இன்பம். ஏமாராது, என்றது முறிந்துபடும் என்னும் பொருள் குறித்தது. மண் - மஞ்சனமாடுதல்.

( 143 )
1700 வண்டூத வம்மருங்கு னோமென்று பூமாலை
கொண்டோச்சுங் காதலார் கூடார் துறந்தார்
கூடா ரவர்துறப்பக் கோல்வளையுந் தோடுறப்பத்
தோடார்பூங் கண்டுயிலா தோழி துயர்வேனோ.

   (இ - ள்.) தோழி - தோழியே!; வண்டு ஊத அம் மருங்குல் நோம் என்று - இயல்பான மணத்தை நுகர வண்டுகள் முரல்வதனாலே அழகிய இடை வருந்தும் என்று; பூ மாலை கொண்டு ஓச்சும் காதலார் - ஒப்பனைக்கு வந்த மலரையும் மாலையையும் வீசிஎறியும் காதலன்; கூடார் துறந்தார் - கூடாமல் கைவிட்டார்; கூடார் அவர் துறப்பக் கோல் வளையும் தோள் துறப்ப - கூடாமல் அவர் நீங்கத் திரண்ட வளையும் தோளினின்றும் நழுவ; தோடு ஆர் பூங்கண் துயிலா துயர்வேனோ? - இதழ்களையுடைய மலரனைய கண்கள் உறங்காவாய் நான் வருந்துவேனோ?

   (வி - ம்.) அம் மருங்குல் - அழகிய இடை. வண்டூதவே நோமிது இவற்றை அணியின் இறுதல் ஒருதலை என்று பூமாலை ஓச்சும் காதலார் என்பது கருத்து. இவை அகத்திணைப் பாடலாதற்குச் சுட்டி ஒருவர் பெயர் கூறாது புனைந்தனள் என்க.

( 144 )

வேறு

1701 ஊன்றகர்த் தனைய போன்று
  மூடெரி முளைப்ப போன்றுந்
தோன்றுபூ விலவத் தங்கட்
  டொகையணி லனைய பைங்காய்
கான்றமென் பஞ்சி யார்ந்த
  மெல்லணை யாழ்கை நீக்கித்
தேன்றயங் கிணர்பெய் கோதை
  சிந்தையி னீட்டி னாளே.