கனகமாலையார் இலம்பகம் |
969 |
|
|
(இ - ள்.) மின் தவழ் மணிவரை மாலை மார்பனை - ஒளி தவழும் மணிமலை போன்ற, மாலை அணிந்த மார்பனை; பொன் தவழ் இளமுலை பொருது புல்லும் நாள் - தேமல் தவழும் இள முலைகள் பொரத் தழுவும் நாள்; என்று கொல் என நினைந்திருந்த செவ்வியுள் - என்றோ என்று எண்ணியிருந்த காலத்தில்; சீவகற்கு இளைய செல்வன் சென்றனன் - சீவகனுக்குத் தம்பியான நந்தட்டன் அவளிருக்கும் மனையைச் சேர்ந்தான்.
|
(வி - ம்.) பொருது - பொர.
|
மார்பன் : சீவகன். புல்லுநாள் - தவழுதற்கியலும் நாள், என்று கொல் என்புழிக் கொல் என்பது ஐயப்பொருள்மேனின்றது. செவ்வி - பொழுது. செல்வன் : நந்தட்டன்.
|
( 147 ) |
வேறு
|
1704 |
ஐவிலி னகல நின்றாங் | |
|
கடிதொழு திறைஞ்சி னாற்கு | |
|
மைவிலை பெற்ற கண்ணாண் | |
|
மைந்தனை மருண்டு நோக்கிக் | |
|
கைவிலுங் கணையு மில்லாக் | |
|
காமன்போந் திருக்க வென்ன | |
|
மொய்வெல்லுங் குருதி வேலான் | |
|
மூவிற்க ணிறைஞ்சி நின்றான். | |
|
(இ - ள்.) ஆங்கு ஐவிலின் அகல நின்று - அவளிருக்குமிடத்திற்கு ஐந்து விற்கிடை நீளத்தே நின்று ; அடி தொழுது இறைஞ்சினாற்கு - அவள் அடிகளில் வணங்கிக் கவிழ்ந்து நின்றவனுக்கு; மைவிலை பெற்ற கண்ணாள் மைந்தனை மருண்டு நோக்கி - மைவிலை பெறுதற்குக் காரணமான கண்ணாள் அவனை மருண்டு பார்த்து; கை விலும் கணையும் இல்லாக் காமன் போந்து இருக்க என்ன - கை வில்லும் அம்பும் இல்லாத காமனே! இங்ஙனே போந்து இருக்க என்று கூற ; மொய் வெல்லும் குருதி வேலான் மூவிற்கண் இறைஞ்சி நின்றான் - பகையை வெல்லும் குருதி படிந்த வேலான் மூவிற்கிடை நீளத்தே வந்து தலைகுனிந்து நின்றான்.
|
(வி - ம்.) 'வேலான் போந்திருக்க' என்று தத்தை கூற 'காமன் போந்து நின்றான்' என்பர் நச்சினார்க்கினியர். அண்ணன் மனைவி காமனே என்று விளிப்பது தகுதி அன்றென எண்ணினார் போலும். எனினும், அவரே, 'பிள்ளையை உவந்து கூறுமாறே கூறினாளென அவள் கூற்றாக்கலுமாம்' என்பர்.
|
'இறைஞ்சினாற்குக் கூற' என இயைக்க.
|
( 148 ) |