பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 970 

1705 திங்கள்வாண் முகமு நோக்கான்
  றிருமுலைத் தடமு நோக்கா
னங்கதிர்க் கலாப மின்னு
  மணியல்குற் பரப்பு நோக்கான்
செங்கயற் கண்ணி னாடன்
  சீறடிச் சிலம்பு நோக்கி
யெங்குளா ரடிக ளென்னா
  வின்னண மியம்பி னானே.

   (இ - ள்.) செங்கயல் கண்ணினாள்தன் - சிவந்த கயல் போன்ற கண்களையுடைய தத்தையின்; திங்கள் வாள் முகமும் நோக்கான் - திங்களைப் போன்ற ஒளி பொருந்திய முகத்தையும் நோக்கானாய்; திருமுலைத் தடமும் நோக்கான் - அழகிய முலைத் தடத்தையும் நோக்கானாய்; அம் கதிர்க் கலாபம் மின்னும் அணி அல்குல் பரப்பும் நோக்கான் - அழகிய ஒளி செயும் கலாபம் மின்னுகின்ற அழகிய அல்குற் பரப்பையும் பாரானாய்; சீறடிச் சிலம்பு நோக்கி - தான் இறைஞ்சி நிற்றலின் அவளுடைய சிற்றடிக்கண் சிலம்பொன்றையுமே நோக்கி; எங்கு அடிகள் உளார் என்னா இன்னணம் இயம்பினான் - எங்கே தலைவர் இருக்கின்றனர் என்று வினவி மேலும் இவ்வாறு கூறினான்.

   (வி - ம்.) முகச் சோர்வையும் முலைப்பசப்பையும் ஆடை மாசுண்டதையும் நோக்கியிருப்பானெனிற் கணவன் பிரிவால் அவள் வருந்தியிருக்கின்ற நிலையை அறிவான். சிலம் பொன்றையுமே நோக்கியதால், அவன் பிரியவும் அணிசுமந்திருக்கின்றனள் என்று வருந்தி வினவுகிறான். உம்மைகள் வருத்த மிகுதியை உணர்த்தின.

( 149 )
1706 பொறிகுலாய்க் கிடந்த மார்பிற்
  புண்ணியன் பொன்றி னானேல்
வெறிகுலாய்க் கிடந்த மாலை
  வெள்வளை முத்த நீக்கி
நெறியினா னோற்ற லொன்றோ
  நீளெரி புகுத லொன்றோ
வறியலென் கொழுநன் மாய்ந்தா
  லணிசுமந் திருப்ப தென்றான்.

   (இ - ள்.) பொறி குலாய்க் கிடந்த மார்பின் புண்ணியன் பொன்றினானேல் - மூவரியாகிய இலக்கணம் விளங்கிக் கிடந்த மார்பையுடைய புண்ணியன் இறந்தான் எனின்; வெறி குலாய்க் கிடந்த மாலை வெள் வளை முத்தம் நீக்கி - மணங் குலவிக் கிடந்த