கனகமாலையார் இலம்பகம் |
971 |
|
|
மாலையையும் வெள் வளையையும் முத்துமாலையையும் விலக்கி; நெறியினான் நோற்றல் ஒன்றோ - நூல் முறைப்படி கைம்மை நோன்பு நோற்றல் ஒருதொழில்; நீள் எரி புகுதல் ஒன்றோ - பெருந் தீயிடை நுழைதல் ஒரு தொழில்; கொழுநன் மாய்ந்தால் அணி சுமந்திருப்பது அறியலென் என்றான் - கணவன் இறந்தால் அணிகளைச் சுமந்திருத்தலை அறியேன் என்றான்.
|
(வி - ம்.) பொறி - ஈண்டு உத்தமவிலக்கணத்திற்குரிய மூன்று கோடுகள். புண்ணியன் என்றது சீவகனை. பொன்றுதல் - இறத்தல். இச் செய்யுளோடு ”காதலர் இறப்பின் கனையெரிபொத்தி, ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது, இன்னுயிர் ஈவர் ஈயாராயின், நன்னீர்ப் பொய்கையின் நளியெரிபுகுவர், நளியெரிபுகாராயின், அன்பரோடு, உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்படுவர்' எனவரும் மணிமேகலை (2 : 42-8) நினைவு கூரற்பாலது.
|
( 150 ) |
1707 |
காய்தழல் கவரப் பட்ட | |
|
கற்பக மரத்திற் கன்றி | |
|
யாய்கழற் குருசில் வாடி | |
|
யற்புத்தீ யழலு ணிற்ப | |
|
வாய்மொழிந் துரைக்க லுற்றாள் | |
|
வனைகுழற் கற்றை வண்டார்த் | |
|
தோய்பிழி துளிக்குங் கண்ணிச் | |
|
சுரும்புசூழ் கொம்ப னாளே. | |
|
(இ - ள்.) காய் தழல் கவரப்பட்ட கற்பக மரத்தின் - சுடுந்தீயினாலே பற்றப்பட்ட கற்பக மரம்போல; ஆய்கழல் குரிசில் அன்புத்தீ அழலுள் கன்றி வாடி நிற்ப - கழலணிந்த நந்தட்டன் அன்பாகிய நெருப்பின் வெம்மையிலே வருந்தி வாடி நிற்க; வனைகுழல் கற்றை வண்தார்த் தோய் பிழி துளிக்குங் கண்ணி சுரும்பு சூழ் கொம்பனாள் - பண்ணிய குழற் கற்றையையும் வளவிய தாரினையும், செறிந்த மதுவைத் துளிக்குங் கண்ணியினையும், உடைய வண்டு சூழ் பூங்கொம்பு போன்றவள்! வாய்மொழிந்து உரைக்கல் உற்றாள் - உண்மையை எடுத்துக் கூறத் தொடங்கினாள்.
|
(வி - ம்.) 'வாய் மொழிந்து - முற்பட அவன் மறைந்து வேற்றுருக் கொண்டிருக்கின்றபடியைக் கூறிவிட்டு' - என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 151 ) |
1708 |
மதுமுகத் தலர்ந்த கோதை | |
|
மாற்றமைந் தற்கு ரைப்பாள் | |
|
கொதிமுகக் குருதி வைவேற் | |
|
குருசிலோ நம்மை யுள்ளான். | |
|