பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 972 

1708 விதிமுக மணங்க ளெய்தி
  வீற்றிருந் தின்ப முய்ப்ப
மதிமுக மறியு நாமே
  வாடுவ தென்னை யென்றாள்.

   (இ - ள்.) மது முகத்து அலர்ந்த கோதை - தேனைத் தன்னிடங் கொண்டு மலர்ந்த மாலையாள்; மைந்தற்கு மாற்றம் உரைப்பாள் - நந்தட்டனுக்கு விடை கூறுகின்றவள்; கொதி முகக் குருதி வைவேல் குருசிலோ நம்மை உள்ளான் - காயும் முகமுடைய இரத்தம் தோய்ந்த கூரியவேலை அணிந்த தலைவனோ நம்மை நினையானாய்; விதிமுக மணங்கள் எய்தி வீற்றிருந்து இன்பம் உய்ப்ப - ஊழின் வாயிலாக மணங்களைப் பெற்று வீற்றிருந்து இன்பம் நிகழ்த்த; மதிமுகம் அறியும் நாமே வாடுவது என்னை என்றாள் - மதிமுகம் என்னும் விஞ்சையை அறிந்திருக்கின்ற நாமே இதற்குப் பிணங்கு தலன்றித் துன்பம் உண்டாம் என வாடுவது என் என்றாள்.

   (வி - ம்.) நாம் எனத் தன்னை உயர்த்திக் கூறினாள்.

   கோதை : காந்தருவதத்தை. குருசில் : சீவகன். உள்ளான் - நினையாதவனாய். விதி - ஊழ், மதிமுகம் - தூரியவிடத்தே நிகழ்வனவற்றை அறிதற்குரிய வித்தை. இதனை ஆபோகினியென்றும் கூறுப. இதனால் சீவகன் உயிருடன் இருத்தன் முதலிய செய்திகளும் உணர்த்தினாளாயிற்று.

( 152 )
1709 வேண்டிய தெமக்கு நேரின்
  வில்வலாய் நுமைய னாரைக்
காண்டியென் றுரைப்பக் காளை
  யெழுமையு மடிமை நேர
மாண்டதோர் விஞ்சை யோதி
  மதிமுகந் தைவந் திட்டா
ணீண்டது பெரிது மன்றி
  நினைத்துழி விளக்கிற் றன்றே.

   (இ - ள்.) வில்வலாய்!- வில் வல்லோனே!; வேண்டியது எமக்கு நேரின் - யாம் வேண்டிய அடிமைத் தொழிலை நீ எமக்கு ஒப்பினால்; நுமையனாரைக் காண்டி என்று உரைப்ப - நும் ஐயனாரைக் காண்பை என்று தத்தை நகை மொழி நவில; காளை எழுமையும் அடிமை நேர - அவனும் இம்மையே அன்றி எழுமையும் அடிமையாகக் கடவேன் என்று நேர்ந்தானாக; மாண்டதோர் விஞ்சை ஒதி மதிமுகம் தைவந்திட்டாள் - அவள் ஒரு விஞ்சையைக் கூறித் தன் திங்களனைய முகத்தைத் தடவி