கனகமாலையார் இலம்பகம் |
973 |
|
|
னாள்; நீண்டது பெரிதும் அன்றி நினைத்துழி விளக்கிற்று - நீண்ட தொலைவும் அரியதுமாக அல்லாமல் அவ்விஞ்சை சீவகன் இருந்த இடத்தை விளக்கியது.
|
(வி - ம்.) இனி, நீண்ட தென்றது இவனுக்கு மிகவும் அரிய காட்சியை. அரிதன்றாக விளக்கிற் றென்றுமாம். பெருமை - அருமை.
|
( 153 ) |
1710 |
பொற்புடை யமளி யங்கட் | |
|
பூவணைப் பள்ளி மேலாற் | |
|
கற்பக மாலை வேய்ந்து | |
|
கருங்குழற் கைசெய் வானை | |
|
முற்படக் கண்டு நோக்கி | |
|
முறுவல்கொண் முகத்த னாகி | |
|
விற்படை நிமிர்ந்த தோளான் | |
|
றொழுதுமெய் குளிர்ந்து நின்றான். | |
|
(இ - ள்.) பொற்பு உடை அமளி - அழகிய அமளியாகிய; அம்கள் பூ அணைப் பள்ளி மேலால் - அழகிய கள்ளையுடைய மலரணைப் படுக்கையின்மேல்; கற்பக மாலை வேய்ந்து கருங்குழல் கைசெய்வானை - கற்பக மாலையைப் புனைந்து கனகமாலையின் கரிய குழலைப் புனைவோனை; முன் படக் கண்டு நோக்கி - எதிரிலே கண்டு மனத்தாலும் நோக்கி; முறுவல் கொள் முகத்தவன் ஆகி - முறுவலையுடைய முகத்துடன்; வில்படை நிமிர்ந்த தோளான் தொழுது மெய் குளிர்ந்து நின்றான் - விற்படை ஓங்கிய தோளினனாகிய நந்தட்டன் வணங்கி உடல் குளிர்ந்து நின்றான்.
|
(வி - ம்.) மனத்தாலே நோக்கி என்றது அவன் வேற்றுருக் கொண்டுள்ளதனை. கற்பகம் : அரசர் தம் ஆணையால் இவ்வுலகிற் கொணர்ந்த கற்பகம் வானவர் சாபத்தால் தன்னிலை அன்றிப் பூவளவே உண்டாயிற்றென்பர். மந்தாரம் கவிரம் என்பனவும் அவ்வாறாம். இனி, உத்தர குருவில் உள்ள கற்பகம் ஈண்டுக் கொணர்ந்தார் என்றுமாம். அல்லது கற்பகம் என்பது கனகமாலையின் ஒரு பெயருமாம்.
|
( 154 ) |
வேறு
|
1711 |
செய்த விஞ்சையைத் தேமொழி மாற்றலு | |
|
மைய னெஞ்சொடு வண்டிமிர் தாரினான் | |
|
பொய்ய தன்மையிற் பூங்கழ லானடிக் | |
|
கெய்து கேனரு ளாயென் றிறைஞ்சினான். | |
|
(இ - ள்.) தேன் மொழி செய்த விஞ்சையை மாற்றலும் - தேனனைய மொழியாள் தான் செய்த விஞ்சையை அவ் வளவிலே
|