கனகமாலையார் இலம்பகம் |
974 |
|
|
மாற்றியவுடன்; வண்டு இமிர் தாரினான் - வண்டுகள் முரலும் மாலையான்; பொய்யது அன்மையின் - தத்தை கூறிய சீவகன் இன்ப நிலை உண்மையாக இருத்தலின்; பூங்கழலான் அடிக்கு எய்துகேன் அருளாய் என்று - யான் அழகிய கழலான் திருவடியை அடைவேன், அதற்கு அருள்புரி என்று; மையல் நெஞ்சொடு இறைஞ்சினான் - மயங்கிய மனத்துடன் வணங்கினான்.
|
(வி - ம்.) அடிக்கு : உருபு மயக்கம்.
|
தேமொழி : காந்தருவதத்தை. மையல் - மயக்கம். கண்டமையானே புதிதாகக் கிளர்ச்சியெய்திய மையல் நெஞ்சம் என்க. தாரினான் : நந்தட்டன். பூங்கழலான் என்றது சீவகனை. எய்துகேன் : தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று.
|
( 155 ) |
1712 |
மதுக்கை மாலையும் வண்டிமிர் சாந்தமும் | |
|
புதுக்கச் சார்ந்தபொன் வாளுஞ் சுரிகையுங் | |
|
கதுப்பி னானமுங் காமர் கலங்களும் | |
|
பதிக்கட் டம்மெனப் பாவையு மேவினாள். | |
|
(இ - ள்.) கை மது மாலையும் - கையையுடைய மது மாலையும் ; வண்டு இமிர் சாந்தமும் - வண்டுகள் முரலும் சந்தனமும்; புதுக்கச்சு ஆர்ந்த பொன் வாளும் சுரிகையும் - புதிய இடைக்கச்சிலே அமைந்த பொன் வாளும் சுரிகையும்; கதுப்பு இன் நானமும் - மயிருக்கு இனிய புழுகும்; காமர் கலங்களும் - விருப்பூட்டும் அணிகளும்; பதிக்கண் தம் என - இவ்விடத்திலே கொண்டு வருக என்று ஏவலரைக் கூவி; பாவையும் ஏவினாள் - இவற்றை அணிக என்று இவனையும் பணித்தாள்.
|
(வி - ம்.) இமிர் - முரலுதற்குக் காரணமான. கச்சு - ஒருவகை ஆடை. சுரிகை - உடைவாள். கதுப்பு-மயிர், இன் நானம் - இனிய புழுகு. காமர் - விருப்பம், கலம் - அணிகலம், பதி என்றது யானிருக்குமிவ்விடத்தே என்பதுபட நின்றது. தம் - தருவீராக. பாவை : காந்தருவதத்தை.
|
( 156 ) |
1713 |
மணியின் மேல்புறம் போர்த்தன்ன மாக்கதிர் | |
|
துணிய வீசுந் துளங்கொளி மேனியன் | |
|
பணியிற் பல்கலந் தாங்குபு சென்றபி | |
|
னணிசெய் கோதையங் காமினி யோதினாள். | |
|
(இ - ள்.) மணியின் மேல்புறம் போர்த்த அன்ன - பளிக்கு மணியின் மேலே (இளைய கதிரைப்) போர்த்தாற் கோல; மாக் கதிர் துணிய வீசும் துளங்கு ஒளி மேனியன் - இருளின் கதிர் கெட வீசும் அசையும் ஒளியை யுடைய மேனியனாக ; பணியின் பல்கலம் தாங்குபு சென்ற பின் - தத்தையின் பணியாலே பல
|