கனகமாலையார் இலம்பகம் |
976 |
|
|
(இ - ள்.) தூமம் ஆர்ந்த துகில் அணைப் பள்ளிமேல் - அகிற்புகை நிறைந்த துகிலை அணையாகக் கொண்ட பள்ளியின் மேல்; காமன் தம்பியின் காளை கிடந்தபின் - காமனைப்போல நந்தட்டன் கிடந்த பிறகு; நாமம் நல் ஒளி நந்தனை ஓர் மா தெய்வம் ஏம மாபுரத்து இட்டது - அச்சந்தரும் நல்ல ஒளியை உடைய நந்தனை ஒரு பெரிய தெய்வம் ஏமமாபுரத்திலே கொண்டு சேர்த்தது.
|
(வி - ம்.) தத்தை ஓர் அறையிலே தரையைச் சந்தனத்தால் மெழுகிச் சுற்றிலும் மாலைகளைத் தூக்கித் துகிலொன்றைத் தரையின் மேல் விரித்து அதன்மேல் நந்தட்டனைத் துயில வைத்துச் சென்றனள். தெய்வம் அவனைக் கொண்டு சேர்த்தது. அச்சங் கூர்தலும் நிருமித்த வடிவாயிற்று.
|
( 159 ) |
1716 |
மின்னும் பூணும் மிளிர்கதி ராரமும் | |
|
பொன்னும் பூத்ததொர் கற்பகப் பூமர | |
|
மன்ன காளை யமர்துயி றேறினான் | |
|
மன்னும் வெஞ்சுடர் மாக்க லிவர்ந்ததே. | |
|
(இ - ள்.) மின்னும் பூணும் மிளிர் கதிர் ஆரமும் பொன்னும் பூத்தது ஒர் கற்பகப் பூமரம் அன்ன - விளங்கும் பூணும் ஒளிருங் கதிரையுடைய முத்து மாலையும் பொன்னும் மலர்ந்ததொரு கற்பக மலர்மரம் போன்ற; காளை அமர் துயில் தேறினான் - காளை தான் கொண்ட துயிலை நீங்கினான்; மன்னும் வெம்சுடர் மாக்கல் இவர்ந்தது - பொருந்திய ஞாயிறும் உதயகிரியிலே வந்து பரவியது.
|
(வி - ம்.) கதிராரம் என்றது முத்துமாலையை. மின்னும்.....பூத்த கற்பகமரம் : இல் பொருளுவமை; இது நந்தட்டனுக்குவமை. துயில் தேறுதல் ்- துயிலுணர்தல். வெஞ்சுடர், ஞாயிறு. மாக்கல் - பெருமலை; ஈண்டு உதயகிரி.
|
( 160 ) |
வேறு
|
1717 |
செய்யவாய் நெடிய கண்ணாள் | |
|
செல்கென விடுக்கப் பட்ட | |
|
வெய்யவாட் டடக்கை வீர | |
|
னிருத்தலும் விசய னென்பான் | |
|
கையவாஞ் சிலையி னானைக் | |
|
கண்டுவந் தருகு சோ்ந்தான் | |
|
பையவாய்ப் பரந்த வல்குற் | |
|
பாவையர்க் கமிர்த மன்னான். | |
|