கனகமாலையார் இலம்பகம் |
977 |
|
|
(இ - ள்.) செய்யவாய் நெடிய கண்ணாள் செல்க என விடுக்கப்பட்ட - சிவந்த வாயையும் நெடிய கண்களையும் உடையாளால் செல்க என்று விடப்பட்ட; வெய்ய வாள் தடக்கைவீரன் இருத்தலும் - கொடிய வாளேந்திய பெருங்கையனான நந்தட்டன் (தெய்வம் விட்ட அரண்மனையினுள்ளிடத்தே) இருந்த அளவிலே; பை அவாய்ப் பரந்த அல்குல் பாவையர்க்கு அமிர்தம் அன்னான் விசயன் என்பான் - பாம்பின் படம் அவாவப் பரவிய அல்குலையுடைய பாவையர்க்கு அமிர்தம் போன்றவனாகிய விசயன் என்பவன்; கை அவாம் சிலையினானைக் கண்டு வந்து அருகு சேர்ந்தான் - கையில் விரும்புதற்குக் காரணமான வில்லையுடையவனைக் கண்டு வந்து அருகே அமர்ந்தான்.
|
(வி - ம்.) கையவாம் சிலையினான் எனவே காமனாம். காமனைப் போன்ற நந்தட்டன் என்க.
|
கண்ணாள் - காந்தருவதத்தை. வீரன் - நந்தட்டன், கை அவாம் சிலையினான் - காமன். காமன் என்றது நந்தட்டனை. அமிர்தமன்னான் : விசயன்.
|
( 161 ) |
1718 |
தெய்வமே கமழு மேனித் | |
|
திருவொளி கலந்த மார்பி | |
|
னையநீ யாரை யென்றாற் | |
|
கவனுரை கொடாது விட்டான் | |
|
பையவே பெயர்ந்து போகிப் | |
|
பனிமலர்க் கோதை மார்பின் | |
|
மையலங் களிறு போலு | |
|
மைத்துனற் கிதனைச் சொன்னான். | |
|
(இ - ள்.) தெய்வமே கமழும் மேனித் திருவொளி கலந்த மார்பின் ஐய! நீ யார் என்றாற்கு - தெய்வத் தன்மையே மணக்கும் மேனியையும் திருவின் ஒளி கலந்த மார்பினையும் உடைய ஐயனே! நீ யார் என்று வினவிய விசயற்கு ; அவன் உரை கொடாது விட்டான் - அவன் மறுமொழி கூறாது விட்டான்; பையவே பெயர்ந்து போகி - மெல்ல நீங்கிச் சென்று; பனிமலர்க் கோதை மார்பின் - தண்ணிய மலர்மாலை மார்பினையுடைய; மையல் அம் களிறு போலும் மைத்துனற்கு - மயக்கமுடைய களிற்றைப் போன்ற மைத்துனனாகிய சீவகனைப் பார்த்து; இதனைச் சொன்னான் - இச் செய்தியைக் கூறினான்.
|
(வி - ம்.) சீவகனுடைய மாற்று வடிவத்தைக் கொண்டு நின்ற தெய்வமாதலின், தெய்வமே கமழும் மேனியாய் விசயற்குக் தோற்றியது. வடிவொன்றேயாகவும் தெய்வத் தன்மையைத் தன் நுண்ணுணர்
|