கனகமாலையார் இலம்பகம் |
978 |
|
|
வால் உணர்தலின், இவற்குச் சிறிது வேறுபாடும் உண்டென்றறிந்து, 'நீ யாரை' என்றான். யாரை : ஐ : அசை.
|
வசுந்தரி என்னும் பணிப் பெண் விசயற்குக் கூற, அவன் கண்ட செய்தியை இதனை என்றார். இவ்விடத்திருந்து உரைகொடாதிருந்ததும், அவன் வெறாதபடி காத்ததும் நந்தட்டன்மேல் தங்கிய தெய்வம் என்றுணர்க என்பர் நச்சினார்க்கினியர். அன்றி, வடிவ வொற்றுமையிருப்பினும் பழகிய நோக்கமின்மையின், 'நீ யார்' என்றான் எனவும், ஒன்று பட்ட வடிவினால் வியந்து வெறாமல் உண்மையுணர்தலை மேற்கொண்டானாகையால் யாதும் புரிந்திலன் எனவும் கொள்ளுதலே சிறப்புடைத்து.
|
( 162 ) |
1719 |
சந்தனக் களியும் பூவுந் தமனியக் குடத்து ணீருங் | |
|
கெந்தநா றகிலு முத்துங் கிளரொளி விளக்கு மேந்தி | |
|
யந்தில்விற் பயிற்றுந் தானம் வழிபட வாங்குச் சென்றாண் | |
|
மந்திர மடந்தை யன்னாள் வசுந்தரி வந்து சொன்னாள். | |
|
(இ - ள்.) சந்தனக் களியும் - சந்தனக் குழம்பும்; பூவும்- மலரும்; தமனியக் குடத்துள் நீரும் - பொற்குடத்திலே நீரும்; கெந்தம் நாறு அகிலும் - மணம் வீசும் அகிற்புகையும்; முத்தும் - முத்து மாலையும்; கிளர் ஒளி விளக்கும் ஏந்தி - விளங்கும் ஒளியையுடைய விளக்கையும் ஏந்தி; வில்பயிற்றும் தானம் வழிபட ஆங்குச் சென்றாள் - விற்பயிலும் கோயிலை வழிபட ஆங்குச் சென்றவளாகிய; மந்திர மடந்தை அன்னாள் வசுந்தரி வந்து சொன்னாள் - மந்திரமாகிய மங்கையைப் போல்வாள் வசுந்தரியென்பாள் வந்து கூறினாள்.
|
(வி - ம்.) அந்தில் : அசை.
|
களி - குழம்பு. தமனியக் குடம் - பொற்குடம், கெந்தம் - மணம். அந்தில் - அசை, மந்திர மடந்தை - இருபெயரொட்டு. இது முதல் நான்கு செய்யுள் விசயன் சீவகனுக்குக் கூறுவன.
|
( 163 ) |
1720 |
ஆரகிற் சேக்கை நீங்கி | |
|
வெறுநிலத் தடிக டாமே | |
|
நீரிதிற் கிடந்த தென்கொ | |
|
லென்றியா னினைந்து போகிச் | |
|
சோ்துணை கழறச் சென்றேன் | |
|
செல்வியோ டாங்குக் கண்டேன் | |
|
போர்பல கடந்த வேலோய் | |
|
மாயங்கொல் போற்றி யென்றாள். | |
|
(இ - ள்.) அடிகள் தாம் - சீவகசாமி; ஆர் அகில் சேக்கை நீங்கி வெறுநிலத்து - நிறைந்த அகிற்புகை கமழும் படுக்கையை
|