பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 979 

விட்டு வெறு நிலத்திலே; நீரிதின் கிடந்தது என்கொல் - பண்புறப் படுத்திருந்தது என்னோ?; என்று யான் நினைந்துபோகி - என்று நான் எண்ணிச் சென்று; சேர்துணை கழறச் சென்றேன் - கனகமாலையைச் சினந்து வினவ அந்தப்புரத்திற்குப் போனேன்; போர்பல கடந்த வேலோய்! - பல போர்களையும் வென்ற வேலோனே!; மாயம் கொல்? - மாயமோ?; செல்வியோடு ஆங்குக் கண்டேன் - கனகமாலையுடன் சீவகசாமியை அங்கே பார்த்தேன்; போற்றி என்றாள் - இந்நிலையை ஓம்புக என்றாள்.

   (வி - ம்.) இவ்வாறு வசுந்தரி கூறினாள் என்றான்.

( 164 )
1721 கணைகடி கண்ணி சொல்லக்
  காணிய யானுஞ் சென்றேன்
மணியிலங் கொண்பொன் வைவாள்
  கேடக மருங்கு வைத்த
விணைகடி சீய மன்னா
  னிளமையும் வனப்பு மேருந்
துணையமை வடிவுஞ் சொல்லி
  னிற்பொறி யொற்றிக் கொண்டான்.

   (இ - ள்.) கணைகடி கண்ணி சொல்ல யானும் காணிய சென்றேன் - அம்பை வெறுத்த கண்ணினாள் இவ்வாறு கூற, யானும் பார்க்கச் சென்றேன்; மணி இலங்கு ஒண் பொன் வைவாள் கேடகம் மருங்கு வைத்த - மணிகளிழைத்த ஒள்ளிய பொன்னாலாகிய கூரிய வாளும் கேடகமும் அருகே வைத்திருக்க; இணைகடி சீயம் அன்னான் - உவமையில்லாத சிங்கம் போன்றவன்; இளமையும் வனப்பும் ஏரும் துணை அமை வடிவும் - இளமையும் அழகும் எழுச்சியும் ஒப்பில்லாத உருவமும்; சொல்லின் நின்பொறி ஒற்றிக் கொண்டான் - கூறுதலுறின் நின் உத்தம இலக்கணத்தை நின்னிடத்துப் பொருத்திக் கொண்டான்.

   (வி - ம்.) வனப்பு - பல உறுப்பும் திரண்டவழிப் பெறுவதோர் அழகு. துணை அமை வடிவு - உவமையின்மையாகிய உருவம். ”துணை அமை வடிவு” என்பதற்கு இளமை வனப்பு ஏர் இவற்றிற்குத் துணையாகப் பொருந்திய வடிவு என்றும் பொருள்கொள்ளலாம். துணை - சார்பு.

( 165 )
1722 நீண்டதோ ணெடிய செங்க
  ணீலமாய்ச் சுரிந்த குஞ்சிப்
பூண்டதோ ரார மேனிப்
  பொன்னுரைத் திட்ட தொக்குங்