(வி - ம்.) வசுந்தரி, அடிகள் வெறுநிலத்தே கிடந்தார் என்று கழறச் சென்றே னென்றமையானும், விசயன் நிற்பொறி ஒற்றிக் கொண்டான் என்றமையானும், உவமை கூறுதல் இன்றி இருவரும், இருவர்க்கும் ஒரு வடிவென்றே கூறினார்கள். உவமையாவது சிறிது ஒத்து இரண்டிற்கும் வேறுபாடு உணர்த்துவது. இஃது அஃதன்மை உணர்க. பொறியும் ஒன்றில் அழுத்தினால் ஒப்பன்றி அதுவேயாய் இருக்கும் என்று உணர்க. இவ்வாற்றானும் நிருமித்தமையே கூறிற்றாம், வசுந்தரி பெண்பாலாதலின் தெய்வத் தன்மை உணர்ந்திலள்.
|
( 166 ) |