கனகமாலையார் இலம்பகம் |
981 |
|
|
பொருள் உரை பெற்று வந்தான் - புனத்து மயில் போன்றாள் தத்தையாலே உண்மையுணர்ந்து இவ்வடிவைப் பெற்று வந்தான்; எனத் தவிராது சென்று ஆங்கு அன்றே எய்தினன் - என்றெண்ணிக் காலந் தாழ்த்தாது சென்று அவ்விடத்தை அப்போதே அடைந்தான்.
|
(வி - ம்.) என்ப : அசை. 'தவிராது' என வருவதால் 'அன்று ஏ' அசை எனினும் பொருந்தும். 'பொருளுரை' - மந்திரம் எனக் கொண்டு பொருளுரையாலே இவ்வடிவைப் பெற்று வந்தான் என்பதும் பொருந்தும்.
|
நச்சினார்க்கினியர், மைந்தன் யாம் என்ப எனக் கூட்டுக என்றும், 'என்ப' எனப் பன்மையாற் கூறிற்று வசுந்தரி கூற்றையுங் கருதி' என்றும் கூறுவர். எறுழ்வலி யுரைத்த மாற்றம் கேட்டு என்ற அளவிலே வசுந்தரியும் விசயனும் நந்தட்டனைச் சீவகன் எனக் கருதினார்கள் என்று சீவகன் உணர்ந்ததனால், 'மைந்தன் நந்தட்டனேயாம் ' எனக் கருதினான் என்பது போதரும், எனவே, இவ்வாறு கொண்டு கூட்டுதல் எற்றுக்கோ?
|
( 167 ) |
1724 |
கருமுகிற் பொடித்த வெய்யோன் | |
|
கடலிடை நடப்ப தேபோற் | |
|
றிருமுகஞ் சுடர நோக்கிச் | |
|
சீவகன் சென்று சோ்ந்தான் | |
|
றருமனை யரிதிற் கண்ட | |
|
தனஞ்சயன் போலத் தம்பி | |
|
திருமலர்த் தடக்கை கூப்பிச் | |
|
சேவடி தொழுது வீழ்ந்தான். | |
|
(இ - ள்.) கடலிடைப் பொடித்த வெய்யோன் கருமுகில் நடப்பதே போல் - கடலில் தோன்றிய ஞாயிறு கரிய முகிலினிடை நடப்பதைப் போல; சீவகன் திருமுகம் சுடர நோக்கிச் சென்று சேர்ந்தான் - சீவகன் தன் அழகிய முகம் ஒளிர நோக்கியவாறு தம்பியினிடம் சென்றடைந்தான்; தருமனை அரிதின் கண்ட தனஞ்சயன் போல - தருமனை அருமையாகக் கண்ட அருச்சுனனைப் போல; தம்பி திருமலர்த் தடக்கை கூப்பிச் சேவடி தொழுது வீழ்ந்தான் - நந்தட்டன் அழகிய பெரிய மலர்க் கையைக் குவித்தவாறு சீவகனுடைய சிவந்த அடியிலே வணங்கி வீழ்ந்தான்.
|
(வி - ம்.) கடலிடைத் தோற்றின இளங்கதிர் கருமுகிலிடத்தே விடாது நடப்பதே போலும் முகம்.முகில் குழலிற்கும், வெய்யோன் முகத்திற்கும் உவமை; 'கடல் - தோற்றுஞ் செஞ்சுடர்போலச் சுடர்ந்ததே' (சீவக. 2497) என்பர் பின்னும்.
|
( 168 ) |