கனகமாலையார் இலம்பகம் |
983 |
|
|
(வி - ம்.) என் உறு நிலைமை ஓரேன் என்றது தேவன் கொண்டு போந்த நிலைமையை அறிந்தும், உண்மை என்று உணராதே என்றவாறு; 'கொண்டு போம் இயக்கன்' (சீவக. 1131) என்று முனிவர் கூறிய கூற்றைக் கந்துகன் கூறக் கேட்டும் இவர் வருந்துவர் என்று இங்ஙனங் கூறினான். பொறியிலாதேன் என்றது இருமுது குரவரையும் வழிபட்டிருக்கும் நல்வினையில்லாதேன் என்றவாறு.
|
'இதனை' என்றது களிற்றிடைக் குணமாலைக் குதவியதனை. முன்னும், 'ஊழ்வினை என்று விட்டான்' (சீவக.1167) என்றார். இனி முன் உற என்றதனை அச்சணந்தி யாசிரியனுக்கு நேர்கின்ற பொழுதெனின் அது பொருந்தாது; என்னை? தான் மேல் வருகின்ற இதனை அறியானாதலானும் ஆசிரியன் கூற்றாலே ஓரியாண்டு அவன் இருப்பனென்றுணர்ந்து, ' இன்னுயிர் அவனை உண்ணும் எல்லை நாள் வந்ததில்லை' (சீவக. 1154) என்று தான் கூறினமையானும் என்பது.
|
'மேனி கன்றிப் போயினீர்' என்றான் மதனன்மேல் ஏவாமையை உட்கொண்டு. குணமாலையின் ஓருயிர்க்காகப் பல்லுயிரையும் வருத்தினேன் என்று நினைத்து, 'முன்னுற இதனை ஓரேன்' என்றான்.
|
( 170 ) |
1727 |
ஆக்கமுங் கேடு முற்றீ ரடிகளே யல்லிர் மேலைப் | |
|
பூக்குலா மலங்கன் மாலைப் புட்கொடி யாற்கு முண்டே | |
|
வீக்குவார் முலையி னார்போல் வெய்துயிர்த் துருகி நைய | |
|
நோக்கினீ ரென்னை யென்றா னுதியழற் குட்ட மொப்பான். | |
|
(இ - ள்.) நுதி அழல் குட்டம் ஓப்பான் - கொழுந்து விட்டெரியும் தீத்திரள் போன்ற நந்தட்டன்; ஆக்கமும் கேடும் உற்றீர் அடிகளே அல்லிர் - நன்மையும் தீமையும் அடைந்தீர் அடிகள் மட்டும் அல்லீர்; மேலைப் பூங்குலாம் அலங்கல் மாலைப்புள் கொடியாற்கும் உண்டு - மேலை நாளில் மலர் கலந்த அசையும் மாலையை உடைய கலுழக் கொடியானுக்கும் இருந்தது; வீக்குவார் முலையினார் போல் வெய்துயிர்த்து உருகி நைய - வாரினால் இறுக்கப் பெற்ற முலைகளையுடைய. உடன்பிறந்த மகளிரைப் போல உதவாதே யிருந்து நான் பெருமூச் செறிந்து உருகி வாட; என்னை நோக்கினீர் என்றான் - என்னைப் பார்த்தீர் என்றான்.
|
(வி - ம்.) புட்கொடியான் : இராமன். என்னை நோக்கினீர் என்றான் 'இராமன் காட்டிற்குச் செல்லுங் கேட்டிற்குத் தம்பியையும் கொண்டு சென்றான்; நீர் நும் கேட்டிற்கு என்னையுங் கொண்டிலீர்' என்று கருதி. தேர் பண்ணிவந்து கண்டபோது மதனன்மேல் ஏவாமல் நில் எனக் குறிப்பித்தான் என்று வருந்தியே இங்ஙனங் கூறினான்.
|
( 171 ) |
1728 |
குரவரைப் பேண லின்றிக் | |
|
குறிப்பிகந் தாய பாவந் | |
|
தரவந்த பயத்தி னாலித் | |
|
தாமரைப் பாத நீங்கிப் | |
|
பருவருந் துன்ப முற்றேன் | |
|
பாவியே னென்று சென்னி | |
|
திருவடி மிசையின் வைத்துச் | |
|
சிலம்பநொந் தழுதிட் டானே. | |
|