கனகமாலையார் இலம்பகம் |
986 |
|
|
திரளின் தூய ஒளி கலந்த புதிய கலன்களின் ஒளி; தடவரை மார்பின் மின்ன - தன்னுடைய பெரிய மலையனைய மார்பிலே ஒளி செயும்படி; தம்பியோடு அமிர்தம் உண்டான் - சீவகன் தன் தம்பியின் எதிரே இருந்து அவனுடன் உண்டான் ; பட அரவு அல்குலாளும் பான்மையால் விருந்து செய்தாள் - அரவின் படம் போன்ற அல்குலையுடையாளும் தகுதிபெறத் தன் மைத்துனனுக்கு விருந்தளித்தாள்.
|
(வி - ம்.) குடவரை - அத்தகிரி. வடவரை - இமயம், வைரச்சாதி - வைரவகை; சாதி வைரம் என மாறினுமாம். அமிர்தம் - உணவு ஆகுபெயர்.
|
( 175 ) |
1732 |
விருந்தவள் செய்த பின்றைத் | |
|
தம்பியுந் தானும் வேறா | |
|
விருந்துழி யென்னைக் காணா | |
|
துற்றதை யெவன்கொ லென்று | |
|
பொருந்தினார் செய்த தெல்லாம் | |
|
புரைவிடுத் துரைமோ வென்னக் | |
|
கருங்கழற் செங்கட் பைந்தார்க் | |
|
காளையீ துரைக்கின் றானே. | |
|
(இ - ள்.) அவள் விருந்து செய்த பின்றை - அவள் விருந்தளித்த பிறகு; தம்பியும் தானும் வேறா இருந்துழி - தம்பியும் தானும் தனியே இருந்தபோது; என்னைக் காணாது உற்றதை எவன்கொல் என்று - என்னைக் காணாமையாற் பெற்றோர் முதலாக எல்லோரும் அடைந்த வருத்தம் என் என்று முதலில் வினவி; பொருந்தினார் செய்தது எல்லாம் புரைவிடுத்து உரைமோ என்ன - நம்மைச் சார்ந்தோர் செய்த கூறுபாடெல்லாம் வேறுவேறாகச் சொல்லாய் என்று சீவகன் கூற; கருங்கழல் செங்கண் பைந்தார்க் காளை ஈது உரைக்கின்றான் - கொடிய கழலையும் செங்கண்களையும் பைந்தாரையும் உடைய நந்தட்டன் இதனை இயம்புகின்றான்.
|
(வி - ம்.) நந்தட்டனுடன் தோழன்மார் கூடுதற்குமுன்பு, அவர் தம்முள் கூறியவாறு நந்தட்டன் அறியானாதலின், தானும் அவரும் கூடின பின்பு பிறந்த செய்தி இவன் சீவகனுக்குக் கூறுகின்றான். இதனால், அதற்கு இது வேறுபாடாயிற்று
|
( 176 ) |
1733 |
புண்ணுமிழ் குருதி போர்த்த | |
|
பொருகளம் போன்று தோன்றி | |
|
யண்ணலங் கதிரு மத்த | |
|
மடைந்துசெவ் வான்கொ ளந்தித் | |
|
துண்ணெனக் களத்தி னீங்கித் | |
|
தொன்னகர்ப் புறத்துத் தொக்கே | |
|
யெண்ணுமின் செய்வ தென்றான் | |
|
பதுமுக னெரியும் வேலான். | |
|