| கனகமாலையார் இலம்பகம் |
987 |
|
|
| |
|
(இ - ள்.) அண்ணல் அம் கதிரும் அத்தம் அடைந்து ஞாயிறும் அத்தகிரியை அடைதலாலே; புண் உமிழ் குருதி போர்த்த பொருகளம் போன்று தோன்றி - புண்ணிலிருந்து சொரியும் குருதியைப் போர்த்த போர்க்களம்போலத் தோன்றி; செவ்வான் கொள் அந்தி - செக்கர்வான் கொண்ட அந்திப் போதிலே; துண் எனக் களத்தின் நீங்கித் தொல்நகர்ப் புறத்துத் தொக்கு - (மழை மிகுதியால்) எல்லோரும் விரைந்து அவ்விடத்தினின்றும் பெயர்ந்து பழைமையான நகரின் வெளியிலே கூடி; எரியும் வேலான் பதுமுகன் செய்வது எண்ணுமின் என்றான் - ஒளிரும் வேலானாகிய பதுமுகன் இனிச் செய்யவேண்டுவதைச் சிந்தியுமின் என்றான்.
|
|
(வி - ம்.) சுதஞ்சணனால் மிகுதியான மழை வந்தது. சீவகன் காணப்படாமையின் எண்ணுமின் என்றான்.
|
( 177 ) |
| 1734 |
மின்னென மிளிரும் பைம்பூட் | |
| |
புத்திசேன் வெகுண்டு வெய்ய | |
| |
கன்னவி றோளி னானைக் | |
| |
காண்கலே மாயி னின்னே | |
| |
மன்னனை வாளி னானே | |
| |
வானகங் காட்டி மூதூர் | |
| |
தன்னையுஞ் சவட்டிப் போகிச் | |
| |
சாமியைச் சார்து மென்றான். | |
|
|
(இ - ள்.) மின்என மிளிரும் பைம்பூண் புத்திசேன் வெகுண்டு - மின்போல விளங்கும் பூணையுடைய புத்திசேனன் சீறி; வெய்ய கல்நவில் தோளினானைக் காண்கலேம் ஆயின் - கொடிய மலைபோன்ற தோளையுடை சீவகனைக் கண்டிலோம் எனின்; இன்னே வாளினாலே மன்னனை வான் அகம் காட்டி - இப்போதே வாளாலே அரசனை விண்ணுலகிற்கு விடுத்து; மூதூர் தன்னையும் சவட்டிப் போகி - பழம்பதியையும் அழித்துச் சென்று; சாமியைச் சார்தும் என்றான் - சீவகசாமியைக் காண்போம் என்றான்.
|
|
(வி - ம்.) புத்திசேன் - புத்திசேனன். தோளினானை - சீவகனை. காண்கலேம் - தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று. இன்னே -
|