பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 988 

   இப்பொழுதே. மன்னனை - கட்டியங்காரனை. வானகம் காட்டி என்றது கொன்று என்றவாறு. சவட்டி - அழித்து. சாமியை - சீவகசாமியை.

( 178 )
1735 சிலையொடு திரண்ட திண்டோட்
  டேவமா தத்த னென்பான்
மலையுடை யுருமிற் சீறி
  மாற்றல னுயிரை யுண்ட
லிலையுடைக் கண்ணி யீர்க்கிஃ
  தெளிதுநங் குருசி லுண்மை
யுலைவினோ டின்மை யாராய்ந்
  தொறுப்பதே துணிமி னென்றான்.

   (இ - ள்.) சிலையொடு திரண்ட திண்தோள் தேவதத்தன் என்பான் - கல்லின் தன்மையுடன் திரண்ட திண்ணிய தோள்களையுடைய தேவதத்தன் என்பவன்; மலைஉடை உருமின் சீறி - மலையைப் பிளக்கும் இடிபோல முழங்கி ; இலையுடைக் கண்ணியீர்க்கு மாற்றலன் உயிரை உண்டல் இஃது எளிது - இலை கலந்த கண்ணி யணிந்த நுங்கட்குப் பகைவன் உயிரைக் கொள்ளுதலாகிய இஃது அரியதன்று; நம் குரிசில் உண்மை இன்மை உலைவினோடு ஆராய்ந்து - நம் அரசன் இருப்பதையும் இல்லாததையும் வருத்தத்துடன் ஆராய்ந்து; ஒறுப்பதே துணிமின் என்றான் - பின்னரே பகையைக் கொல்வதை உறுதி கொண்மின் என்றான்.

   (வி - ம்.) அவன் சிறையாய் இருக்கின், 'இஃது ஆகாதென்றான், தேவமாதத்தன், உலோகமா பாலன்' (சீவக. 395) போற் கொள்க.

( 179 )
1736 பவ்வத்துப் பிறந்த வெய்ய
  பருதிபோற் றிறலி னாற்குத்
தெவ்வரைக் கிழங்கி னோடுந்
  தின்றுநீ சொன்ன வாறே
யெவ்வத்தைத் தணித்து மென்றான்
  சீதத்த னென்ன லோடு
மவ்வல மணந்த தண்டார்ப்
  பதுமுக னிதனைச் சொன்னான்.

   (இ - ள்.) சீதத்தன் - (அதனைக் கேட்ட) சீதத்தன் என்பவன்; நீ சொன்னவாறே - நீ கூறியவாறே; பவ்வத்துப் பிறந்த வெய்ய பருதிபோல் திறலினாற்கு - கடலில் தோன்றிய கொடிய ஞாயிறு போன்ற திறலுடைய சீவகற்கு; தெவ்வரைக் கிழங்கி