கனகமாலையார் இலம்பகம் |
989 |
|
|
னோடும் தின்று எவ்வத்தைத் தணித்தும் என்றான் - பகைவரை அடியோடு தீர்த்துத் துன்பத்தை நீக்குவோம் என்றான் ; என்னலோடும் - என்றுரைத்த அளவிலே; மவ்வல் மணந்த தண்தார்ப் பதுமுகன் இதனைச் சொன்னான் - முல்லை மலர் கமழும் தண்ணிய தாரையுடைய பதுமுகன் இதனைக் கூறுகின்றான்.
|
(வி - ம்.) ஞாயிறு இருளை நீக்குமாறு போலத் தன்னை சூழ்ந்த பகையை நீக்குதற்குரியன், அவற்குத் தீங்கு வாரா தென்றான். மக்கள் நூற்றுவரையுஞ் சேரக் கோறற்குக் கிழங்கினோடும் என்றான். மவ்வல் அம் மணந்த : அம் சாரியை.
|
( 180 ) |
1737 |
நம்பிநந் தட்டன் கேட்க | |
|
நங்கட்குக் குரவ ருள்ளார் | |
|
தம்பரி வகற்றி யோம்பி | |
|
நீர்க்கடன் மரபு தாங்கிக் | |
|
கம்பஞ்செய் பரிவு நீங்கிக் | |
|
கற்பிப்பார்க் குவர்த்துச் சொல்லா | |
|
ரிம்பரிவ் வுலக மொப்பாய்க் | |
|
கென்னையா னுரைப்ப தென்றான். | |
|
(இ - ள்.) கற்பிப்பார்க்கு உவர்த்துச் சொல்லார் - தம்மைக் கற்பிப்பார்க்குத் தாம் வெறுத்துக் கூறார் ; இம்பர் இவ்வுலகம் ஒப்பாய்க்கு யான் உரைப்பது என்னை - இவ்விடத்து இவ்வுலகொழுக்கந் தன்னை ஒக்கும் நினக்கு இனி யான் கூறுவது யாது? நம்பி நந்தட்டன் கேட்க! -(எனினும்) நம்பியாகிய நந்தட்டனே! கேட்பாயாக!; இக் கம்பம் செய்பரிவு நீங்கி - இந் நடுக்கந்தருந் துன்பத்தினின்றும் விடுபட்டு; நங்கட்குக் குரவர் உள்ளார் தம் பரிவு அகற்றி ஓம்பி - நமக்குக் குரவராய் உள்ளோருற்ற வருத்தத்தையும் நீக்கி, அவரிருக்கும் அளவும் அவரைப் பேணி; நீர்க் கடன் மரபுதாங்கு - அவர் இறந்தால் நீர்க்கடனாகிய முறைமையைச் செய்வாயாக என்று கூறினான்.
|
(வி - ம்.) என்னை : என் : எவன் என்பதில் திரிபு. ஐ : சாரியை.
|
நம்பியாகிய நந்தட்டன் என்க. நந்தட்டன் : விளி. நங்கட்கு - நமக்கு. குரவராயுள்ளார் என்றது கந்துகனையும் சுநந்தையையும், கம்பம் - நடுக்கம். இம்பர் - இவ்விடத்தே. என்னையான் உரைப்பது என்றது. உனக்கு யான் கூறுதல் மிகை என்பதுபட நின்றது.
|
( 181 ) |
1738 |
ஓம்படை சாற்றற் பால | |
|
துள்ளவர்க் காகு மன்றே | |
|
யாம்புடை யென்க ணில்லை | |
|
யங்கையென் கண்க ளாகத் | |
|