பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 990 

1738 தேம்படு தாரி னீர்க்குஞ்
  செல்வற்குஞ் செய்வ செய்தேன்
காம்படு காட்டுத் தீயிற்
  கனன்றுட னெழுக வென்றேன்.

   (இ - ள்.) உள்ளவர்க்கன்றே ஓம்படை சாற்றற் பாலது ஆகும் - உயிருடனே இருப்பார்க்கன்றே இவரைப் பாதுகாத்துக் கொள்ளென்று கூறுவது தகுதியாகும்?; ஆம்புடை என்கண் இல்லை - உயிர் வாழும் பக்கம் என்னிடம் இல்லை; என் கண்கள் அங்கை ஆகத் தேன்படு தாரினீர்க்கும் செல்வற்கும் செய்வ செய்தேன் - என் கண்களை அகங்கைகளாகக் கொண்டு நுமக்குஞ் செல்வனுக்குஞ் செய்யும் முறைமை எல்லாம் செய்துவிட்டேன்; காம்புஅடு காட்டுத் தீயின் கனன்று உடன் எழுக என்றேன் - மூங்கிலை எரிக்குங் காட்டுத் தீயைப்போலக் கொதித்துச் சேர எழுமின் என்றேன்.

   (வி - ம்.) அழுதது 'இழவு' என்னும் மெய்ப்பாடு. 'தாரினீர்க்கு' எனவே இருமுது குரவர் முதலிய சுற்றத்தினர் எல்லோரையும் அடக்கிக் கூறினா னாயிற்று.

( 182 )
1739 கோட்டிளங் குழவித் திங்க
  ளிரண்டன்ன வெயிற்றுக் கோளே
வேட்டவோர் சிங்கஞ் சூழ்ந்த
  வேங்கையி னினத்தின் வெய்ய
வாட்படை யெழுந்து வாழ்க
  சீவக னென்னு மாங்கட்
பாட்டினை யொருவ னெங்கள்
  பரிவறப் பாடி னானே.

   (இ - ள்.) கோட்டு இளங்குழவித் திங்கள் இரண்டு அன்ன எயிற்றுக் கோளே வேட்ட - வளைவான இளங்குழவிமதி இரண்டு போல உள்ள பற்களாற் கொலையை விரும்பிய; ஓர் சிங்கம் சூழ்ந்த வேங்கையின் இனத்தின் - ஒரு சித்தைச் சூழ்ந்த புலித்திரளைப்போல (உள்ள); வெய்ய வாள்படை எழுந்து சீவகன் வாழ்க என்னும் ஆங்கண் - நம்முடைய கொடிய வாளேந்திய படை (அச் சிங்கத்தின் ஏதம் தீர்த்தற்குப் புலித்திரள் எழுந்தாற்போல) எழுந்து சீவகன் வாழ்க என்ற அளவிலே; பாட்டினை ஒருவன் எங்கள் பரிவு அறப் பாடினான் - ஒரு பாட்டை ஒருவன் எங்கள் துன்பந்தீரப் பாடினான்.

   (வி - ம்.) சீவகன் சிங்கமும் மற்றையோர் புலித்திரளுமாகக் கொண்டு சிங்கத்தின் ஏதந்தீர்க்க எழுந்த புலித்திரள் என்றான்.

( 183 )