கனகமாலையார் இலம்பகம் |
995 |
|
|
அழகிய ஒலியையுடைய யாழைப் பண்ணி; மாண்ட கோல் தடவ - அதன் சிறந்த நரம்புகளை இசைப்பதற்கு; அணிமுலைத் தடத்தின் ஒற்றி வெப்பரால் தட்பம் மாற்றி - அழகிய முலைகளிலே ஒற்றி முலைவெப்பத்தால் யாழின் குளிர்ச்சியை நீக்கி; கீதம் பாட யான் பெரிதும் பேது உற்று - இசையைப் பாட யான் பெரிதும் வருந்தி; இணைமலர்க் கண்ணிக்கு ஒவ்வா இளிவரு கிளவி சொன்னேன் - இணைந்த மலரனைய கண்ணிக்குத் தகாத இழிமொழியை உரைத்தேன்.
|
(வி - ம்.) மாண்ட கோல் - மாட்சிமையுடைய யாழ் நரம்பு. தடவ - வருட. மாதர் அவள் எனச் சுட்டு மாத்திரையாய் நின்றது. வெப்பர் - வெப்பம். தட்பம் - குளிர்ச்சி, ஈண்டுத் தளர்ச்சி, என்பது படநின்றது. கீதம் - இசை. இளிவரு கிளவி என்றது. அறியலென் கொழுநன் மாய்ந்தால் அணி சுமந்து இருப்பது என்று கூறியதனை - (1706).
|
( 190 ) |
1747 |
சொல்லிய வென்னை நோக்கித் | |
|
துளங்கனும் மடிகள் பாதம் | |
|
புல்லயான் புணர்ப்ப லென்று | |
|
பொழுதுபோய்ப் பட்ட பின்றை | |
|
யெல்லிருள் விஞ்சை யோதி | |
|
யிவ்வழி யிடுவித் திட்டாள் | |
|
சொல்லுமி னடிக ணீரும் | |
|
போந்தவா றெனக்கு மென்றான். | |
|
(இ - ள்.) சொல்லிய என்னை நோக்கி - இழிமொழியுரைத்த என்னைப் பார்த்து; துளங்கல் - வருந்தாதே; நும் அடிகள் பாதம் புல்ல யான் புணர்ப்பல் - நும் தலைவருடைய திருவடிகளைத் தழுவ, யான் கூட்டுவேன்; என்று - என்று கூறி; பொழுது போய்ப் பட்ட பின்றை - ஞாயிறுபோய் மறைந்த பிறகு; எல் இருள் விஞ்சை ஓதி - விடியற்கால இருளிலே மறைமொழியினை முறையுறக் கணித்து; இவ்வழி இடுவித்திட்டாள் - இவ்விடத்தே விடச் செய்தனள்; அடிகள் நீரும் போந்தவாறு எனக்கும் சொல்லுமின் என்றான் - அடிகளே! இனி நீர் வந்தவாற்றையும் எனக்குக் கூறுமின் என்றான்.
|
(வி - ம்.) காளையீதுரைக்கின்றவன் (சீவக. 1732) இடுவித் திட்டாள் என்றுரைத்தான் என முடிக்க.
|
( 191 ) |
1748 |
தாதையா ருவப்பச் செய்வான் | |
|
றாழ்கச்சிற் பிணிப்புண் டைய | |
|
போதரா நின்ற போழ்திற் | |
|
போர்ப்புலிக் குழாத்திற் சீறிக் | |
|