பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 996 

1748 காதனஞ் சுற்ற மெல்லாங்
  கையிலங் கெஃக மேந்திச்
சாதலே புரிந்து தோன்றுந்
  தன்மையந் நகரிற் கண்டேன்.

   (இ - ள்.) ஐய - ஐயனே!; தாதையார் உவப்பச் செய்வான் தாழ் கச்சிற் பிணிப்புண்டு - தந்தையாரை மகிழ்விக்க வேண்டித் தாழ்ந்த கச்சினாலே பிணிக்கப்பெற்று; போதராநின்ற போழ் தின் - வருகின்ற காலத்தில்; போர் புலிக் குழாத்திற் சீறி - போர்புரியும் புலித் திரளினைப் போல முழங்கி; காதல் நம் சுற்றம் எல்லாம் கைஇலங்கு எஃகம் ஏந்தி - அன்புடைய நம் சுற்றத்தார் யாவரும் கையில் விளங்கும் வேலை ஏந்தி; சாதலே புரிந்து தோன்றும் தன்மை அந் நகரிற் கண்டேன் - சாதற் பொருட்டுத் தோன்றும் இயல்பை அந் நகரிலே கண்டேன்.

   (வி - ம்.) இங்கும் நச்சினார்க்கினியர், 'கச்சின் : இன் : உவமப் பொரு.' எனக் கொண்டு, 'கச்சிற் பிணித்தாற் போலச் சொல்லாற் பிணிக்கப்பட்டு' என்று பொருள் கூறுவர்.

( 192 )
1749 கண்டபி னின்னைக் காண்பேன்
  கருவரை புலம்பிப் பல்கால்
விண்டுவு முடைய வாலின்
  வெடித்துராய் வெகுண்டு நோக்கா
வெண்டிசை யோரு மௌ்கக்
  குஞ்சர மிரியப் பாயு
மொண்டிறற் சிங்க மன்ன
  கதழொளி யுடற்சி கண்டேன்.

   (இ - ள்.) கண்ட பின் நின்னைக் காண்பேன்- அவர்களைக் கண்ட பின் நின்னை நோக்கும் யான்; கருவரை விண்டுவும் உடைய வாலின் பல்கால் வெடித்து - கரிய மலையிலே சிகரமும் அஞ்சி உடையும்படி வாலினாலே பல முறையும் வீசி; உலம்பி உராய் வெகுண்டு நோக்கா - முழங்கிப் பரந்து வெகுண்டு பார்த்து; எண்திசையோரும் எள்க - எட்டுத் திசையோரும் அச்சம் மிகும்படி; குஞ்சரம் இரியப் பாயும் - குஞ்சரம் ஓடப் பாயும்; ஒண்திறல் சிங்கம் அன்ன - சிறந்த திறலையுடைய சிங்கம் போல; கதழ் ஒளி உடற்சி கண்டேன் - பேரொளியை உடைய நின் மாறுபாட்டைப் பார்த்தேன்.

   (வி - ம்.) 'பழிவந்து மூடுமென் றெள்குதும்' (சிற். 92) என்றாற் போல 'எள்க' என்பது 'அஞ்ச' என்னும் பொருளில் வந்தது. 'அஃக' எனவும் பாடம். முன்னர் அவன், 'சிங்கத்தை யின்றி எழுந்தேம்'