பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 997 

   (சீவக. 1731) என்றதற்கு, 'நீ அப் புலித்திரளுக்குச் சிங்கம்' என்றான் என்க. 'விண்டுவும்' என வகரவுடம்படுமெய் பெற்றது விகாரம். 'விண்டும்' என வருதல் வேண்டும்.

( 193 )
1750 சினந்தலைப் பெருக்கித் தீக்கோ
  ளுறுப்பினைச் சுருக்கித் தீப்போ
லனன்றுநில் லாத கண்ணா
  னிறுத்தின செவியிற் றாகி
முனம்புக வடக்கிப் பின்போந்
  திருந்துபாய் வான மைந்த
வினந்தலைப் புலியோ டொக்குந்
  தோழர்நின் னிடத்திற் கண்டேன்.

   (இ - ள்.) சினம் தலைப்பெருக்கி - சினத்தைத் தம்மிடத்தே வளர்த்து; தீக்கோள் உறுப்பினைச் சுருக்கி - தீக்கோட்பாட்டையுடைய உறுப்புக்களைச் சுருக்கி; தீப்போல் அனன்று நில்லாத கண்ணால் - தீயைப்போல் அழன்று சுழல்கின்ற கண்ணுடன்; நிறுத்தின செவியிற்று ஆகி - நேரே நிறுத்தின காதுகளை உடையதாய்; அடக்கி - உடம்பினைக் குறைத்து; பின்போந்திருந்து - பின்னே சென்றிருந்து; முனம் புகப் பாய்வான் அமைந்த - முன்னே செல்லப் பாய்தற்கிருந்த; இனந்தலைப் புலியோடொக்கும் - கூட்டத்தை இடத்தே கொண்ட புலியோடு ஒப்பாகிய; தோழர் நின்னிடத்தில் கண்டேன் - தோழரை நின்னிடத்தே கண்டேன்.

   (வி - ம்.) தீக்கோள் உறுப்பு - தீய கோட்பாட்டினையுடைய உறுப்புக்கள். நில்லாத என்பது சுழற்சியுடைய என்னும் பொருள்பட நின்றது. கண்ணான் என்புழி ஆன் உருபு ஒடு உருபின் பொருட்டு. செவியிற்று - செவியினையுடைத்து . இனம் - கூட்டம்.

( 194 )
1751 கூடநீர் நின்ற பெற்றி
  கண்டிப்பா னோக்கு வேற்கொர்
கேடகம் வாளொ டேந்திக்
  கெடுகவிந் நகர மென்னா
மாடத்தி னுச்சி நின்ற
  மலைமக டன்மை கண்டே
யாடவர்க் குழுவை யொப்பா
  யஞ்சினே னதன்க ணென்றான்.

   (இ - ள்.) நீர்கூட நின்ற பெற்றி கண்டு இப்பால் நோக்குவேற்கு - நீர் அங்ஙனம் சேர நின்ற தன்மை கண்டு (தந்தையார்