கனகமாலையார் இலம்பகம் |
998 |
|
கருத்து அஃதன்மையின் நும்மை ஏவாமல்) இப் பக்கத்தே பார்ப்பேன் பொருட்டு; கெடுக இந் நகரம் என்னா - அழிவதாக இந் நகரம் என்று கூறி; ஓர் கேடகம் வாளொடு ஏந்தி - ஒரு கேடகத்தையும் வாளையும் ஏந்தி; மாடத்தின் உச்சி நின்ற மலைமகள் தன்மை கண்டு - கோயிலின் உச்சியிலே நின்ற தத்தையின் இயல்பை நோக்கி; ஆடவர்க்கு உழுவையொப்பாய் - ஆடவராகிய மான்றிரளுக்குப் புலிபோன்றவனே!; அதன்கண் அஞ்சினேன் என்றான் - அந் நிலையிலே அஞ்சினேன் என்றான்.
|
(வி - ம்.) ஆடவர்க் குழுவை ஒப்பாய். ஏகதேச உருவகம்.
|
பெற்றி - தன்மை. மாடத்தின் உச்சி மலைமகள் ஏந்தி நின்ற தன்மை கண்டே என மாறுக. உழுவை - புலி. அதன்கண் - அந்நிலையிடத்து.
|
( 195 )
|
1752 |
பெண்ணிடர் விடுப்ப வாழ்விற் |
|
சாதலே பெரிது நன்றென் |
|
றெண்ணினே னமர்கள் வீயு |
|
மியல்பினா னெருங்கப் பட்டுக் |
|
கண்ணிநா னியக்கன் றன்னைச் |
|
சிந்தித்தேன் கடவுள் வாழ்த்தி |
|
யண்ணல்வந் தழுங்கத் தோன்றி |
|
யாங்கென்னைக் கொண்டு போந்தான். |
|
(இ - ள்.) பெண் இடர் விடுப்ப வாழ்வின் சாவதே பெரிதும் நன்று என்று எண்ணினேன் - தன் மனையாள் தன் இடரை நீக்க வாழ்வதினும் சாதலே மிகவும் நல்லதென்று நினைத்தேன்; நமர்கள் வீயும் இயல்பினால் நெருங்கப்பட்டு - (நமக்கு ஒரு செயலும் இன்றாகச் செய்து) சுற்றமும் இறக்கும் வகையோடு முன்செய்த தீவினை நெருங்கப்படுதலாலே; கண்ணி - இந்நிலைக்கு அருகன் அல்லது வேறொருவர் இன்றென்று கருதி; கடவுள் வாழ்த்தி - அருகனை வாழ்த்தி; இயக்கன் தன்னைச் சிந்தித்தேன். சுதஞ்சணனை (அவனுக்குக் கூறிய நிலையைவிட்டு) நினைத்தேன்; அண்ணல் வந்து அழுங்கத் தோன்றி ஆங்கு என்னைக் கொண்டு போந்தான் - அப்பெரியோன் வந்து என்னைச் சூழ்ந்தவர் வருந்தத் தோன்றி அவ்விடத்தினின்றும் என்னைக் கொண்டு போந்தான்.
|
(வி - ம்.) வாமணத் தொழுவின் முற்றி - மீளிமை செய்யின், (சீவக. 658) என்ற நிலையைவிட்டு நினைத்தான்.
|
( 196 )
|
1753 |
மந்திர மூன்றுந் தந்து |
|
வானவன் விடுப்பச் செல்வேற் |
|
கிந்திர திருவிற் சூழ்ந்த |
|
வினமழைக் குழாத்தின் வேழங் |
|