| கனகமாலையார் இலம்பகம் | 
999  | 
 | 
  | 
|  1753 | 
கொந்தழற் காட்டுத் தீயால் |   |  
|   | 
  வளைப்புண்ட குழாத்தை நோக்கிச் |   |  
|   | 
சிந்தித்துக் கவன்று நிற்பத் |   |  
|   | 
  திருமழை பொழிந்த தன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வானவன் மந்திரம் மூன்றும் தந்து விடுப்ப - சுதஞ்சணன் மூன்று விஞ்சைகளையும் வழி முதலியவற்றையும் அறிவித்துவிட்டபின்னர்; செல்வேற்கு - செல்லுவேனுக்கு; இந்திர திருவில் சூழ்ந்த இனமழைக் குழாத்தின் - இந்திர வில்லினாற் சூழப்பட்ட முகில் திரளைப்போல; கொந்து அழல் காட்டுத்தீ்யால் வளைப்புண்ட வேழக்குழாத்தை நோக்கி - பெரு நெருப்பையுடைய காட்டுத் தீயினாலே சூழப்பட்ட யானைத் திரளைப் பார்த்து; கவன்று சிந்தித்து நிற்ப - வருந்தித் தெய்வத்தைப் பார்த்து நிற்ப; அன்றே திருமழை பொழிந்தது - அப்போதே நல்ல மழை பெய்தது. 
 | 
| 
    (வி - ம்.) 'குழாத்தை நோக்கிச் செல்வேற்கு' எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். 
 | 
| 
    மந்திரமும் பிறவும் உண்மையின், உம்மை, 'இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்' (தொல் - கிளவி. 33) உம்மையன்றி மூன்று மந்திரமும் வழி முதலியனவும் என எச்சவும்மை 'செல்வேற்குக் கவன்று' என்க. எண்ணிறந்த இனக் களிற்றின் துயரை நீக்குதற்குரிய யான் நீக்காதொழியின், செய்தல், செய்வித்தல், உடன்பாடு என்னும் மூவகைப்பாவத்தினும் உடன்பாடாகிய பாவம் எய்தி, நெருநலிலே சுற்றமும் யானும் உற்ற துன்பமும் போல் இதுவும் பின்பு வருமென்று எனக்குக் கவன்று என்றான். முன்பு, 'வேழப் பேரினந் தங்கிய காடு' (சீவக. 1179) என்றார். 
 | 
| 
    சீவகன் மற்றும் வழியில் நிகழ்ந்தன எல்லாம் கூறாது. இதனையே கூறியது என்னையெனின், 'யாண்டு நேரெல்லை' (சீவக. 393) என்ற மொழி நந்தட்டன் அறியானாதலின். இன்னும் இராசமாபுரத்துச் சென்றாலும் இத் துன்பம் உளதாமோ என்று கருதினும் அது கருதாதபடி, மற்றை நாளே அத் தீவினையுள்ளது நீங்கவேண்டும். பேரறஞ் செய்தேன் என்றான் என்க. இனிச் செல்வேற்கு மழை பொழிந்ததெனக் கூட்டி, தேவன், 'பாம்பும் அல்லவும் - கடுந்திறல் நோய்களுங் கெடுக்கும்' (சீவக. 1218) என்ற மந்திரத்தைக் கூறலின், அவன் கூறிய மந்திரமே இம் மழையைப் பெய்வித்த தென்றுமாம். இதற்கு, நெருநற் சுற்றமுற்ற துயரை இவையும் உற்றன என்று கவன்று என்க இம்மந்திரங்களின் பெருமை கூறியது இனி நமக்கு ஏதம் இன்று என அறிவித்தது. 
 | 
( 197 ) | 
|  1754 | 
வெல்களிற் றச்ச நீக்கி |   |  
|   | 
  விரைவொடு வனத்தி னேகிப் |   |  
|   | 
பல்லவ தேய நண்ணித் |   |  
|   | 
  தனபதி யென்னு மன்ன |   | 
 
 
 |