பக்கம் எண் :

5
3.         நெஞ்சறிவுறூஉ

நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து
  கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே
கோலங் குயின்ற குழலுங் கொழுஞ் சிகையுங்
காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே
காலக் கனலெரியின் வேவன கண்டாலுஞ்
சால மயங்குவ தென்வாழி நெஞ்சே.

     (இ - ள்.) நெஞ்சே - என்னெஞ்சமே நீ் ; நீல நிறத்தனவாய்
நெய்கனிந்து - நீல நிறமுடையனவாய் நெய்ப்புமிக்கு ; போது அவிழ்ந்து -
சூட்டப்பட்ட மலர்கள் மலரப்பட்டு ; கோலம் குயின்ற குழல் - ஒப்பனை
செய்யப்பட்ட அழகிய கூந்தல் என்று மகளிர் கூந்தலைப் பாராட்டுகின்றனை ;
கோலம் குயின்ற குழலும் - அவ்வாறு ஒப்பனை செய்யப்பட்ட அக்
கூந்தலும் ; கொழுஞ்சிகையும் - அதனாலியன்ற கொழுவிய கொண்டையும் ;
காலக் கனல் எரியின் வேம் - ஈமத்தீயாகிய நெருப்பின்கண் வெந்தழியு
மல்லவோ? ; காலக் கனல் எரியின் - அவ்வாறு ஈமத்தீயின்கண் ; வேவன
கண்டாலும் - வெந்தழிவனவற்றை நீ கண்கூடாகக் கண்டுவைத்தும் ; சரல
மயங்குவது என் - அவற்றினியல்போராது பெரிதும் மயங்குவதற்குக்
காரணந்தான் என்னையோ? வாழி நெஞ்சே - நீ வாழ்வாயாக !

     (வி - ம்.) நெய்கனிதல் - நெய்ப்புமிகுதல். போது - மலர். கோலம் -
ஒப்பனை. குயின்ற - செய்த. வாழி : அசை. சிகை - கொண்டை. காலக்கனல்
- ஊழித்தீ ; ஈண்டு ஈமத்தீ.

     நெஞ்சே நீ மகளிருடைய கூந்தலையும் அதன் ஒப்பனையும் கண்டு
பெரிதும் காமுற்று மயங்குகின்றனை ; இத்தகைய கூந்தல்களை நாள் தோறும்
அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டிருப்பா யல்லையோ ? அங்ஙனம்
கண்டிருந்தும், அதன்பால் நீ இவ்வளவு மயங்குவானேன் ! இம்மயக்கம்
“கூராரும் வேல்விழியார் கோலாக லங்கள் எல்லாம், தேராத சிந்தையரைச்
சித்திகொளும் அல்லாமல், நேராஉள் நி்ற்கும் நிலையுணர்ந்து நற்கருமம்,
ஆராய்பவருக்கு அருவருப்பதாய் விடுமே “ என்பது குறிப்பு.     (3)

4.           இதுவுமது

வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்
  மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே
மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்னெறிக்க ணில்வாழி நெஞ்சே
உத்தம நனனெறிக்கண் நின்றூக்கஞ் செய்தியேல்
சித்தி படர்த றெளிவாழி நெஞ்சே.