(இ
- ள்) நெஞ்சே
! வாழி - என் நெஞ்சமே நீ நீடு வாழ்வாயாக!;
வித்தகர் செய்த-தொழிற்றிறமையுடைய கம்மியராற் செய்யப்பட்ட; விளங்கு
முடி கவித்தார் - விளக்கமுடைய முடிக்கலன் அணிந்த மன்னர்களுடைய;
மத்தகம்- சிறந்த தலைகளும் ; மாண்பு அழிதல் காண் - ஒருகாலத்தே
அச்சிறப்பெல்லாம் அழிந்து பிறரால் இகழப்படுதலை நினைத்துக் காண்பாயாக!; மத்தக
மாண்பு அழிதல் கண்டால் - அவ்வாறு அரசர் தம் தலை
முதலியனவும் சிறப்பழிந்தொழிதலை ஆராய்ந்து மெய்ம்மையுணரின் ;
மயங்காதே உத்தம நல்நெறிக்கண் நில் - அவற்றைக் கண்டு மயங்காமல்
தலை சிறந்த நன்னெறியிலே நிலைபெற்று நிற்கக் கடவை ; உத்தம
நல்நெறிக்கண் நின்று ஊக்கஞ் செய்தியேல்- மெய்ம்மையுணர்ந்தவழி,
தலைசிறந்த நல்லொழுக்கத்தின்கண் மேலும் முயன்றொழுகுவாயாயின் ; சித்தி
படர் தல் தெளி - நீ வீட்டுலகத்தினை எய்திப் பேரின் புற்றிருத்தல் ஒருதலை
என்றுணர்ந்துகொள்ளக் கடவை ; நெஞ்சே வாழி - என்னெஞ்சமே நீ நீடு
வாழ்வாயாக ! என்பதாம்.
(வி
- ம்.) வித்தகர்
- தொழிற்றிறமை மிக்கவர். வித்தகர் செய்த முடி,
விளங்கு முடி எனத் தனித்தனி கூட்டுக. மத்தகம் - தலை. உத்தம நன்னெறி
என்றது, நல்லொழுக்கத்தினை. சித்தி - வீடு பேறு.
இனி,
இவ்விரண்டு செய்யுட் கருத்தோடு,
“வண்டவாம்
வார்குழலும் வாளெயிறும் பூண்முலையும்
தொண்டைவாய் நன்னலமும் தோளுந் துடியிடையும்
கண்டவாங் காமுகரும் யாமும் கணநரியும்
விண்டவாக் கொண்டுணரின் வேறுவே றாமன்றோ“
எனவும்,
“கரையவா
வாங்குங் கயமகன் கைத்தூண்டில்
இரையவாப் பன்மீ னிடருறுவ தேபோல்
நுரையவா நுண்டுகிலு மேகலையுஞ் சூழ்ந்த
வரையவாய்ப் பட்டார்க்கு மாழ்துயரே கண்டீர் ’’
எனவும்,
“மட்டார்
மலர்புனைவும் வாணெடுங்கண் மையணிவும்
பட்டார் கலையுடையும் பல்வளையும் பைந்தோடு
நட்டாரை யெல்லா நரகுக்கே யுய்க்குநாய்க்
கொட்டார்த்தார் செய்யுங் கோலங்கள் வண்ணம்’’
எனவும்,
|