பக்கம் எண் :

7

          “ஆடினாய் நான மணிந்தாய் கலன்மாலை
           சூடினா யேனுஞ் சுணங்கார் வன முலையா
           யூடினா யாக வொழுக்கூற்றைப் பல்பண்டம்
           மூடினாய் தோலின் முகம னுரையேனே”

எனவும்,

          “மின்போ னுடங்கிடையும் வேயேய் திரடோளு
           மென்றே யிவைமகிழ்ந்தீங் கென்முன்னே வந்தாயாற்
           புன்றோலும் பல்லென்பும் போர்த்த புறங்காட்டு
           ளன்றே யுறைவ வவற்றான் மருள்வேனோ “

                                     
( தருமவுரை - 149-123.)

எனவும் வரும் நீலகேசிச் செய்யுள்களும் நினைவு கூரற்பாலன.

     இவ்வாறு உடம்பின் வாலாமையை நி னைந்து நினைந்து அதன்பாற்
பற்றறுப்பதனைச் சமண சமயத்தினர் ‘அசுசியநுப்பிரேக்கை’ என்று கூறுப.
பௌத்தர் ‘அசுப பரவனை’                                 (4)

     (இனி வருகின்ற செய்யுள்கள் புறத்திரட்டிலிருந் - தெடுக்கப்பட்டவை.)


5. மக்கள் யாக்கையும் செல்வமும் பெறுதல் அரிதெனல்

வினைபல வலியி னாலே வேறுவே றியாக்கை யாகி
  நனிபல பிறவி தன்னுட் டுன்புறூஉ நல்லுயி்ர்க்கு
மனிதரி னரிய தாகுந் தோன்றுத றோன்றி னாலு
மினியவை நுகர வெய்துஞ் செல்வமு மன்னதேயாம்.

     (இ - ள்.) பலவினை வலியினாலே - பல்வேறு வகைப்பட்ட
தீவினைகளின் ஆற்றலாலே ; வேறு வேறு யாக்கை ஆகி-பலவேறு
வகைப்பட்ட உடம்புகளை யுடையனவாகி ; நனி பல பிறவி தன்னுள் -
மிகவும் பலவாகிய பிறப்புக்களிலே புகுந்து அவ்வப்பிறப்புக்களிலெல்லாம் ;
துன்புறூஉம்-துயர மெய்துகின்ற ; நல் உயிர்க்கு - நல்ல நம்முயி்ர்க்கு ;
மனிதரில் தோன்றுதல் அரியது ஆகும் - மக்கட் பிறப்பிலே பிறத்தல் மிகவும்
அரியதொரு செயலேயாம் ; தோன்றினாலும் - ஒரோவழி அரிதாய அம்மக்கட்
பிறப்பிலே பிறந்தாலும் ; இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்னதே ஆம்
- அம்மக்கட் பிறப்பின்கண் இனிய பொருள்களை நுகர்தற்கு
இன்றியமையாததாய் வருகின்ற செல்வந்தானும் ; அம்மக்கட் பிறப்புப்
போன்றே பெறுதற்கரியதொன்றேயாம். ஆகவே மக்கட் பிறப்பும்
மாண்புடைத்தன்று என்பதாம்.

     (வி - ம்.) உயிரின் பிறப்புக்கள் வேறுபடுதற்குக் காரணம் வினை
வேறுபாடேயாதலின் பலவினை வலியினாலே வேறுவேறு யாக்கையாகி
என்றார் ; இதனை,