“அருளில்லார்க்
கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு “ --குறள்,
247
எனவும் பாராட்டிக்
கூறுதலுணர்க.
பொறிகளா னுகருமின்பமும் அறத்தால் வருமெய்யின்பமும், வீடு
பேற்றின்பமும் ஆகிய எல்லா இன்பங்களுக்கும் செல்வம்
ஏதுவாதல்பற்றிப் பொதுவாக “இனியவை நுகர எய்துஞ் செல்வம் “
என்றார். அன்னது என்றது முற்கூறியபடி அரிது என்றவாறு. (5)
6.
|
இதுவுமது
உயர்குடி நனியுட் டோன்றலூனமில் யாக்கை யாதன் |
|
மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல்
பெரிதுண ரறிவே யாதல் பேரறங் கோட
லென்றாங் கரிதிவை பெறுத லேடா பெற்றவர் மக்க ளென்பார். |
(இ
- ள்.) ஏடா-தோழனே
! ; நனி உயர் குடியில் தோன்றல்-
ஒரோவழி மக்கட்பிறப்பிற் பிறந்த வழியும் மிகவுமுயர்ந்த குடியிலே
தோன்றலும் ; ஊனம் இல் யாக்கை ஆதல் - உயர்குடியிலே தோன்றிய
வழியும், கூன் குருடு செவிடு முட முதலிய குறைகளில்லாத நல்லுடம்பு
பெறுதலும் ; மயர்வு அறு கல்வி கேள்வித் தன்மையால் வல்லர் ஆதல் -
மயக்கமறுதற்குக் காரணமான கல்வி யறிவும் கேள்வியறிவும் பெறுமாற்றால்
வன்மையுடையராதலும் ; பெரிது உணர் அறிவே ஆதல் - அவ்வாறு
கல்வியானும் கேள்வியானும் அறிவு வலியராய விடத்தும் அவ்வறிவு
மெய்யுணரும் அறிவாதலும் ; பேர் அறம் கோடல் - அங்ஙனம் அறிவு
சிறந்துழியும் சிறந்த நல்லறத்தை மேற்கொண்டொழுகுதலும் ; என்று ஆங்கு
இவை அரிது - என்று கூறப்படுகின்ற இப்பேறுகள் எல்லாம் எய்துதல்
அரிதேயாம் ; பெற்றவர் மக்கள் என்பார் - அரியனவாய இவை எல்லாம்
ஒருங்கே பெற்றவர்களே மக்கட் பிறப்புடையார் என்று மதிக்கத் தகுந்தவர்
ஆவர் என்பதாம்.
(வி
- ம்.)
நனி உயர் குடியுட்டோன்றல் என மாறுக. செப்பம், நாண்,
ஒழுக்கம், வாய்மை, நகை, ஈகை, இன்சொல், இகழாமை, ஒழுக்கம குன்றாமை,
பண்பிற்றீராமை, சலம்பற்றிச் சால்பில செய்யாமை, பணிவுடைமை,
இன்னோரன்ன மாந்தர்க்கணிகலனாய நலமெல்லாம் உயர்
குடிப்பிறப்புடையார்மாட்டு இயல்பானுளவாகலும் ஏனையோர் மாட்டு
இலவாகலும் காண்டலின். அந்நற்பண்புகள் எல்லாம் ஒருங்குடையார்க்கன்றிப்
பிறவிப் பயன் எய்துதல் அரிதாகலின், அவ்வுயர்குடிப்பிறப்பும் பெறற்கரும்
பேறென்றார்.
ஊனம்
- செவிடு குருடு முதலிய உறுப்புக் குறைபாடுகள். மயர்வு -
மயக்கம்.
“நுண்ணிய
நூல்பல கற்பினு மற்றுந்தன்
னுண்மை யறிவே மிகும் “ --குறள்,
373
|