பக்கம் எண் :

10

என்பது பற்றி, கல்வி கேள்வியில் வல்லுநராய விடத்தும் உணர்
அறிவுடையராதல் அரிதென்றார் ஈண்டு உணர் அறிவு என்றது
மெய்யுணர்வினை. “கற்றனர் ஞான மின்றேல் காமத்தைக் கடக்கலாமோ ?”
என்னும் கம்பர் மொழியினும் ஞானம் என்பது மது.

     பேரறம் என்றது ஈண்டு ஆருகதசமயவறங்களை. இவை பெற்றவர்
மக்கள் எனவே பெறாதார் மக்களாய்ப் பிறந்து வைத்தும் பயன் பெறுதலிலர்
என்றாராயிற்று.

     மக்களாகப் பிறப்பதன் அருமையை :

          “பரவை வெண்டிரை வடகடற் படுநுகத் துளையுட்
           டிரைசெய் தென்கட லிட்டதோர் நோன்கழி சிவணி
           அரச வத்துளை யகவயிற் செறிந்தென வரிதால்
           பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே”

          “விண்டு வேய்நர லூன்விளை கானவ ரிடனும்
           கொண்டு கூர்ம்பனி குலைத்திடு நிலைக்களக் குறும்பும்
           உண்டு நீரென வுரையினு மரியன வொருவி
           மண்டு தீம்புனல் வளங்கெழு நாடெய்த லரிநே“

          “வில்லின் மரக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம் படுத்த
           பல்லி னார்களும் கடுகடற் பரதவர் முதலா
           எல்லை நீங்கிய விழிதொழி லிழிகுல மொருவி
           நல்ல தொல்குலம் பெறுதலு நரபதி யரிதே”

          “கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென வழிநாள்
           அருவி போற்றொடர்ந் தறாதன வரும்பிணி ளழலுட்
           கருவிற் காய்த்திய கட்டளைப் படிமையிற் பிழையா
           துருவின் மிக்கதோ ருடம்பது பெறுதலு மரிதே”

          “காம னன்னதோர் கழிவனப் பறிவொடு பேறினும்
           நாம நாற்கதி நவைதரு நெறிபல வொருவி
           வாம னூனெறி வழுவறத் தழுவின ரொழுகல்
           ஏம வெண்குடை யிறைவமற் றியாவது மரிதே”

எனவரும்
சீவகசிந்தாமணியானன்குணர்க.       (முத்தி - 151-5) (6)


7.        கற்புடை மகளிர்

நாடு முரு நனிபுகழ்ந் தேத்தலும்
  பீடு றும்மழை பெய்கெனப் பெய்தலும்
கூட லாற்றவர் நல்லது கூறுங்காற்
பாடு சான்மிகு பத்தினிக் காவதே.