(இ
- ள்.)
கூடல் ஆறு அவர்
- ஒத்த அன்பினான் மனமியைந்து
கூடி வாழுகின்ற இல்லற நெறியினை யுடையோராகிய தலைவன்
தலைவியருள்வைத்து; நல்லது கூறுங்கால் - நல்ல சிறப்பினை ஆராய்ந்து
கூறுமிடத்து; நாடும் ஊரும் நனி புகழ்ந்து ஏத்தலும் - தாம் பிறந்த நாடும்
தாம் வாழுகின்ற ஊரும் நனி மிகவும் புகழ்ந்து பாராட்டுதலும்; பீடு உறும்
மழை - பெருமை மிக்க மழையானது; பெய்க எனப் பெய்தலும் - பெய்க
என்று ஏவிய துணையானே பெய்தற்குக் காரணமான தெய்வத்தன்மையும்;
பாடுசால் பத்தினிக்கு ஆவது - அவ்விருவருள்ளும் பெருமைமிக்க கற்புடைய
தலைவியாலாவனவேயாம் என்பதாம்.
(வி
- ம்.) கூடல்
- ஆறு. ஆணும் பெண்ணும் அன்பால் இணைந்து
வாழுகின்ற இல்வாழ்க்கை நெறி. எனவே, கூடலாற்றவர் என்பது தலைவன்
தலைவியர் என்பது பெற்றாம்.
நாடும் ஊரும் புகழ்கின்ற புகழ்ச்சி இருவருக்கும் பொதுவாயினும் அப்
புகழுக்குக் காரணமாயிருப்பது தலைவியே யன்றித் தலைவன் அல்லன்
என்பது கருத்து. என்னை?
“புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
னேறுபோற் பீடு நடை” --குறள், 59
எனவும்,
“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்” --குறள், 59
எனவும்,
“இல்லதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ
னில்லவண் மானாக் கடை” --குறள், 53
எனவும்,
“மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினு மில்” --குறள், 52
எனவும் தெய்வப்புலவர் திருவள்ளுவனாரும் இல்லறத்தாலெய்தும் புகழுக்குக்
காரணம் கற்புடைய வாழ்க்கைத் துணைவியே என்பதுபட ஓதுதலு முணர்க.
இனி, மனையறம்
தெய்வத் தன்மையுடையதாய்ப் பொலிவதற்கும்
கற்புடைய மகளிரே காரணம். தெய்வத்தன்மை தலைவிக்கே
சிறந்துரிமையுடையதாம். அத்தெய்வத் தன்மையுடைமையாலே அத்தகைய
மகளிர் வாழும் நாடே சிறப்புடையதாம் என அவருடைய
தெய்வத்தன்மைக்கு ஒன்று எடுத்துக் காட்டுவார்,
‘மழை பெய்கெனப் பெய்தலும்’ என்றார், இத்தகைய சிறப்புத்
தலைவனுக் கின்மையுமுணர்க. இக்கருத்தினை இந்நூலாசிரியர்
திருக்குறளினின்றும் எடுத்தாளுகின்றனர். அது வருமாறு:-
|