பக்கம் எண் :

12

        “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
         பெய்யெனப் பெய்யு மழை”  
            --குறள், 55

என்னும் அருமைத் திருக்குறளே அஃதாம். இதற்கு ஆசிரியர் பரிமேலழகர்,
“தெய்வந்தான் ஏவல் செய்யுமென்பதாம், இதனாற் கற்புடைய வளதாற்றல்
கூறப்பட்டது” என்பர்,

இன்னும், இவ்வினிய செய்யுட் கருத்தோடு, கண்ணகியார் மாண்பினை,


       
“என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
         வண்ணச் சீறடி மண்மக ளறிந்திலள்
         கடுங்கதி்ர் வெம்மையிற் காதலன் றனக்கு
         நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித்
         தன்றுயர் காணாத் தகைசால் பூங்கொடி
         இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக்
         கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
         பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்
         வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
         நீணில வேந்தர் கொற்றஞ் சிதையாது
         பத்தினிப் பெண்டிர் இருந்த நாடென்னும்
         அத்தகு நல்லுரை அறியா யோநீ”

எனக் கூறி அடைக்கலங் கொடுக்கின்ற கவுந்தியடிகளாரின்
மணிமொழிகளையும் ஒப்புநோக்குக.

இன்னும் பத்தினிப் பெண்டிரின் தெய்வத்தன்மையை,

        “அல்லன் மாக்க ளிலங்கைய தாகுமோ
         எல்லை நீத்த வுலகங்கள் யாவுமென்
         சொல்லி னாற்சுடு வேனது தூயவன்
         வில்லி னாற்றற்கு மாசென்று வீசினேன்”
 
                                       கம்ப - சூளா - 18
எனவரும் வைதேகியின் வீரவுரையானும் தெளிக.            (7)


8.       கற்பில் மகளிர்

பள்ள முதுநீர்ப் பழகினு மீனினம்
  வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉங்
கள்ளவிழ் கோதையர் காமனோ டாயினு
முள்ளம் பிறிதா யுருகலுங் கொண்ணீ.

     (இ - ள்) மீன் இனம் - மீன் கூட்டம்; முது பள்ளநீர்ப் பழகினும் -
பழையதாகிய ஆழமான நீர்நிலையில் வாழ்ந்தாலும்; புதியது வெள்ளம்
காணின் - புதியதாகிய வெள்ளம் வருமிடத்து