பக்கம் எண் :

15
10,         இதுவுமது

எத்துணை யாற்று ளிடுமண னீர்த்துனி
  புற்பனி யுக்க மரத்திலை நுண்மயி
ரத்துணை யும்பிற ரஞ்சொலி னார்மனம்
புக்கன மென்று பொதியறைப் பட்டார்.

     (இ - ள்.) ஆற்றுள் இடுமணல் எத்துணை - ஆற்றினுள்ளே
நீராலிடப்பட்ட எக்கரின்கண் உள்ள மணல் எத்தனையுண்டு?; நீர்த்துளி
எத்துணை - அந்த யாற்று வெள்ளத்தின்கண் நீர்த் துளிகள் எத்தனையுண்டு?,
உக்க புற்பனி எத்துணை-புல்லின்மேற் பெய்த பனித்துளி எத்துனையுண்டு?,
மரத்து இலை எத்துணை - மரங்களின் பாலமைந்த இலைகள்
எத்தனையுண்டு?; நுண்மயிர் எத்துணை - உயிரினங்களின் உடலிலமைந்த
நுண்ணிய மயிர்கள் எத்தனையுண்டு; அத்துணையும் - அத்தனை பேர், பிறர்
அஞ்சொலினார் மனம் புக்கனம் என்று - பிறர் மனையாட்டியராகிய அழகிய
சொல்லையுடைய கற்பிலா மகளிருடைய; மனம் புக்கனம் என்று பொதியறைப்
பட்டார் - மனத்திலே புகுந்தேம் என்று மகிழ்ந்து தீவினைக் காளாகிப்
பிறவியாகிய சிறையிலே அகப்பட்டனர் என்பதாம்.

     (வி - ம்)
கற்பிலாமகளிர் கண்களாகிய வலையிலகப்பட்டு, அவர்
தம்மை காதலிக்கின்றனர் என்று மகிழ்ந்து அவ்வழி யொழுகித் தீவினை
செய்து, பிறவியாகிய சிறையிடைப்பட்டோர் இவ்வுலகின்கண் எண்ணிறந்தோர்
என்பதாம்.

எத்துணை என்பதனை யாண்டும் கூட்டுக.

ஆதலால் கற்பில்லா மகளிரைக் காண்டலும் கூடாது என்பது குறிப்பென்க.

     இதனாலன்றோ வள்ளுவப்பெருந்தகையார் பிறர்மனை நோக்காமையே
பேராண்மையென்று பேசுவாராயினர்.                           (10)


11.           இதுவுமது

தனிப்பெயற் றண்டுளி தாமரை யின்மேல்
  வளிப்பெறு மாத்திரை நின்றற்
றொருவ னளிப்பவற் காணுஞ் சிறுவரை யல்லாற்
றுளக்கிலர் நில்லார் துணைவளைக் கையார்.

     (இ - ள்) வளை துணைக்கையார்- வளையலணிந்த இரண்டாகிய
கைகளையுடைய கற்பிலா மகளி்ர் நெஞ்சம் ஒருவன்பால் நிலைத்து நிற்பது:
தண்பெயல் தனித்துளி - குளிர்ந்த மழையினது ஒரு துளியானது;
தாமரையின்மேல் - தாமரையிலையின் மேலே; வளிபெறும் மாத்திரை -
காற்று வந்து வீசப்பெறும் வரையில் நின்றற்று -