நிலைத்து
நின்றாற் போல்வதாம்; அளிப்பவன் ஒருவன் காணும் சிறுவரை
அல்லால் - என்னை? அம்மகளிர் தாமும் தம்மை அனிசெய்யும் புதியவன்
ஒருவனைக் காணப்பெறும் அச்சிறிய பொழுதளவே முன்னர்த் தாம்
காமுற்றவன் பால் மனம் வைத்து நிற்பது அல்லாமல்; துளக்கிலர் நில்லார் -
மனந்துளங்காது நிற்பதிலர் ஆதலான், என்பதாம்.
(வி
- ம்) தனித்துளி என இயைக்க, தாமரையிலையின்மேல்
வீழ்ந்த
மழைத்துளி காற்று வீசப் பெறுமளவும் ஓரிடத்தே நிற்கும், காற்று வீசியவுடன்
நிலைபெயர்ந்தியங்குவதுபோலக் கற்பிலாமகளி்ர் நெஞ்சமும் தான்
காமுற்றவன்பால் புதியவன் ஒருவனைக் காணும் வரையி்ல் நிற்கும், அவனைக்
கண்டவுடன் அவன்பாற் சென்றழுந்தும் என்றவாறு, இக்இகருத்தினை,
“இனம்போன் றினமல்லார் கேண்மை
மகளிர் மனம்போல வேறு படும்” - குறள், 822
எனவருந் திருக்குறளினும், அக்குறட்கு ஆசிரியர் பரிமேலழகர் “இடம்
பெற்றாற் பெண்பாலார் மனம்போல வேறுபடும்” என உரை கூறுவதினும்,
மேலும் அதன் விளக்கவுரையின்கண் “அவர் மனம் வேறுபடுதல் ‘பெண்
மனம் பேதின் றெருப்படுப்பே னென்னும் - ஏண்ணில் ஒருவன் என்பதனானும்
அறிக” என்று இவ்வளையாபதிச் செய்யுள் பிறிதொன்றனை எடுத்துக்
காட்டுதலினும் காண்க.
(11)
12. |
மக்கட்
பேறு
பொறையிலா வறிவு போகப் |
|
புணர்விலா விளமை மேவத்
துறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை
நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீ்ர்ச் சிறையிலா நகரம் போலும்
சேயிலாச் செல்வ மன்றே. |
(இ
- ள்,) சேய்
இலாச் செல்வம் - மகப்பேறில்லா தவருடைய
செல்வம்; பொறை இலா அறிவும் - பொறுமையில்லா தவருடைய
அறிவுடைமையும், போகப்புணர்வு இலா இளமை - இன்பந் தரும்
புணர்ச்சிபெறாத இளம் பருவமும்; மேவத்துறை இலா வனச வாவி -
இறங்குதற்குத் துறையில்லாத தாமரைக்குளமும்; துகில் இலாக்
போலத்தூய்மை - ஆடையில்லாத ஒப்பனையினது தூய தன்மையும் ;நறை
இலா மாலை - மணமில்லாத மலர்மாலையும்; கல்வி நலமிலாப் புலமை -
நூல்கள் பலவும் கற்றிலாத புலமைத்தன்மையும்;
|