பக்கம் எண் :

17

நல் நீர்ச் சிறை இலா நகரம் - நல்ல நீர்நிலைகள் இல்லாத நகரமும்;
போலும் - போன்று சிறிதும் பயனற்றதாகும் என்பதாம்.

     (வி - ம்.) சேய் மகவு. சேயிலாச் செல்வம் பொறையிலா அறிவு
முதலியவற்றைப் போன்று பயனற்றதாம் என்றவாறு.

     போகம் - இன்பம். புணர்வு - காதலர்க் கூட்டரவு. வனசம் - தாமரை.
ஆடையுடாது அணிகள் மட்டும் அணியப்பட்ட கோலம் என்க. கோலம் -
ஒப்பனை. நறை - மணம். கல்வி நலமிலாப் புலமை என்றது,
இயற்கையினமைந்த நுண்மாணுழை புலத்தினை.

          “கல்லாதான் ஓட்பம் கழியநன் றாயினும்
           கொள்ளா ரறிவுடை யார்”           
   --குறள், 404

என்புழி வள்ளுவர் ‘ஒட்பம்’ என்பதுமது.

இனி, இதனோடு--

          “படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
           உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
           குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
           இட்டுத் தொட்டுங் கல்வியுந் துழந்தும்
           நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்
           மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
           பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே”   
 --புறநா, 188

எனவரும் பாண்டியன் அறிவுடைநம்பி அருமைச் செய்யுளும்,

         “பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
          றென்னுடைய ரேனு முடையரோ-இன்னடிசில்
          புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்
          மக்களையிங் கில்லா தவர்”
         --நளவெண்பா, 241

எனவரும் புகழேந்தியார் பொன்மொழியும்,

         “கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்ப்பூசி
          நற்குண நற்செய்கை பூண்டாட்கு-மக்கட்பே
          றென்பதோர் செல்வமு முண்டாயி னில்லன்றே
          கொண்டாற்குச் செய்தவம் வேறு”  
     --நீதிநெறி, 81

எனவரும் குமர குருபரவடிகளார் அருண்மொழியும்,

         “மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
          நன்கல நன்மக்கட் பேறு”   
            --குறள், 90
வ. - 2