“கற்பன
வூழற்றார் கல்விக் கழகத்தாங்
கொற்கமின் றூத்தைவா யங்காத்தல்-மற்றுத்தம்
வல்லுரு வஞ்சன்மி னென்பவே மாபறவை
புல்லுரு வஞ்சுவ போல்”
எனவும்,
“தன்னை வியப்பிப்பான் றற்புகழ்தல் தீச்சுட்ர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால்-தன்னை
வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்
நயவாமை யன்றே நலம்”
எனவும்,
“பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாமே நோற்பதொன் றுண்டு-பிறர்பிறர்
சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்குத் தாழ்ச்சி சொலல்”
எனவும் வரும் குமரகுருபரர் மணிமொழிகளும்,
“படிறும் பயனிலவும் பட்டியுரையும்
வசையும் புறனு முரையாரே யென்று
மசையாத வுள்ளத் தவர்”
எனவரும் ஆசாரக்கோவையும்,
இன்னோரன்ன எண்ணிறந்த அறிவுரைகள் நாநலமும் தீங்கும்பற்றி
நல்லிசைப் புலவர்களால் ஓதப்பட்டிருத்தல் அந்நா காக்கும் காப்பே தலை
என்பதனை உணர்த்துகின்றன. அவையெல்லாம் அறிந்துகொள்க.
இவை யெல்லாம் நாவினது செயல் வகைபற்றி எழுந்தன. இனி,
இச்செய்யுளில் நாவினை ஐம்பொறிகளுள் ஒன்றென்றலின், நாவினால் நுகரும்
சுவை கருதி ஊன் முதலியன நுகர்ந்து நரகத்து வீ்ழ்தலும் நல்லுணவே உண்டு
துறக்கம் புகுதலும் பிறவும் நாவான் விளையும் தீமையும் நலங்களுமே
யாகலால் இவ்வாற்றானும் நாவடக்கம் இன்றியமையாமையுங் கொள்க.
(13)
14. |
அறமனை
காத்தல்
தார நல்வதந் தாங்கித் தலைநின்மின் |
|
ஊரு
நாடு முவத்த லொருதலை
வீர வென்றி விறன்மிகு விண்ணவர் சீரி னேத்திச் சிறப்பெதி்ர்
கொள்பவே. |
(இ
- ள்.) தாரம் தாங்கி - மாந்தர்காள்! நீவிர் நுங்கள் காதன்
மனைவிமாரைப் பேணி; நல்வதம் தலை நின்மின் - நல்ல
|