பக்கம் எண் :

21

என விரிவகையாலறிவுறுத்தும் நல்லறங்களையே இச்செய்யுள் தொகை
வகையால் “தாரம் நல்வதம் தாங்கித் தலைநின்மின்!” என
விளம்புகின்றதென்க. இது முறை நிரனிறை. ‘தார நல்லிதம்’ என்பதும்
பாடம்.                                           (14)


15.

விரதத்தின் விரிவகை, பிறர்மனை நயவாமை முதலியன

பெண்ணி்ன் ஆகிய பேரஞர்ப் பூமியுள்

  எண்ண மிக்கவ ரெண்ணினு மெண்ணிலார்
பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்ன தாயினு மேதில்பெண் ணீக்குமின்.

     (இ - ள்.) பேரஞர்ப் பூமியுள் - பெரிய துன்பமுழத்தற்
கிடனான நரகருலகத்தின்கண்ணே; பெண்ணின் ஆகிய எண்ணம்
மிக்கவர் - பிறர் மனையாட்டியராகிய மகளிர் காரணமாகத் தீய
நினைவுகள் மிகுந்த ஆடவர்கள்; எண்ணினும் எண்ணிலார் -
எண்ணுமிடத்தும் எண்ணிலாதவர் ஆவர்; பின்னி நின்ற பெருவினை
மேல்வரும் - நும்முயிரைப் பிணித்து நின்ற பெரிய தீவினைகள்
மேலும் மேலும் வருவனவாம்; என்ன தாயினும் - ஆதலால் நுங்கட்கு
என்ன நலம் உண்டாவதாயிருந்தாலும்; ஏதில் பெண் நீக்குமின் -
பிறமகளிரை விரும்புதல் ஒழிமின் என்பதாம்.

     (வி - ம்.)
பேரஞர்ப்பூமி என்றது நரகருலகினை; நரகத்தில்
வீழ்ந்து நலிபவருள் பிறர் மனைவிமாரை விரும்பித் தீவினை
செய்தோரே எண்ணிறந்தவர். பிறர்மனை நயத்தலே மாபெருந்தீவினை;
அத்தீவினை மேல் மேல் வருகின்ற பிறவிகளினும் நும்மைத்
தொடர்ந்துவந்து நலிவது திண்ணம். ஆதலால் உங்கட்கு இப்பொழுது
எத்துணையி்ன்பம் வந்தாலும் பிறர்மனை நயவாதே கொண்மின்!
என்றவாறு. “அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை, நின்றாரிற்
பேதையா ரி்ல்” என்பது பற்றிப் பிறர்மனை நயத்தலைப் பெருவினை
என்றார்.

     இனி, இத் தீவினையே எல்லாத் தீவினைகளுக்குங் காரணமாதல்
பற்றிப் பெருவினை மேல்வரும் என்றார் எனினுமாம். என்னை?

         “முடிபொரு ளுணர்ந்தோர் முதுநீ ருலகிற்
          கடியப் பட்டன வைந்துள வவற்றிற்
          கள்ளும் பொய்யுங் களவுங் கொலையுந்
          தள்ளா தாகுங் காமந் தம்பால்
          ஆங்கது கடிந்தோ ரல்லவை கடிந்தோரென
          நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள்
          நீ்ங்கா ரன்றே நீணில வேந்தே
          தாங்கா நரகந் தன்னிடை யுழப்போர்”


எனவரும் மணிமேகலையும் நோக்குக.                (22-149-74.)