இதனை,
“நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு” --குறள், 452
எனவும்,
“மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா
மின்னா னெனப்படுஞ் சொல்” --குறள், 459
எனவும்,
“மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு” --குறள், 454
எனவும்,
“நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்”
எனவும் வரும் நிருக்குறள்களாலுண்ாக. (16)
17. |
இதுவுமது
கள்ளன் மின்கள வாயின யாவையும் |
|
கொள்ளன்
மின்கொலை கூடி வருமறம்
எள்ளன் மின்னி்ல ரென்றெண்ணி யாரையும் நள்ளன்
மின்பிறர் பெண்ணொடு நண்ணன்மின். |
(இ
- ள்.) களவு ஆயின யாவையுங் கள்ளன்மின் -
களவு என்று
கருதப்படுகின்ற தொழில் வாயிலாய் எப்பொருளையும்
கவர்தல்
செய்யாதொழிமின்; கொலைகூடி வரும் அறம் கொள்ளன் மின்-
உயிர்க்கொலையோடு கூடிவருகின்ற அறங்களை மேற்கொள்ளா தொழிமின்;
இலர் என்று எண்ணி எள்ளன்மின - வறியவர் என்று நினைத்து யாரையும்
இகழாதிருமின், யாரையும் நள்ளன்மின் - ஆராயாமல் யாரையும்
நட்புக்கொள்ளா தொழிமின், பிறர் பெண்ணொடு நண்ணன்மின் - பிறர்
மனைவியர்பாற் செல்லாதொழிமின் என்பதாம்.
(வி - ம்.) களவு
என்று பிறராற் கருதப்படும்படி எப்பொருளையும்
கொள்ளாதொழிக! என்றவாறு. கொலை கூடிவரும் அறம் என்றது, வேதியர்
வேத வேள்விகளை. சிறு தெய்வங்கட்கு உயிர்ப்பலி செய்து வழிபடுதல்
முதலியனவுமாம். யாரையும் நள்ளன்மின் என்றது, ஆராய்ந்து நல்லாரை
நட்டலன்றிக் கண்டவரோடெல்லாம் நட்புச் செய்யற்க என்றவாறு.
இனி இதன்கண், கள்ளன்மின் களவாயின யாவையும் என்பதனை,
|