பக்கம் எண் :

25

         “எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
          கள்ளாமை காக்கதன் னெஞ்சு”
           --குறள், 281

எனவும்,

         “உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
          கள்ளத்தாற் கள்வே மெனல்”
            --குறள், 282

எனவும் வரும் குறள் முதலியவற்றானு முணர்க. கொலை கூடி வரும்
அறம் கொள்ளன்மின் என்பதனை,

         “அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
          பிறவினை யெல்லாந் தரும்”
            --குறள், 328

எனவும்,

         “அவிசொரித் தாயிரம் வேட்டலி னொன்ற
          னுயிர்செகுத் துண்ணாமை நன்று”
         --குறள், 259

எனவும் வருத் திருக்குறள்களானும்,

         “கொலையற மாமெனும் கொடுந்தொழின் மாக்கள்
          அவலப் படிற்றுரை”
            (மணி - 9 - 62 - 3)

எனவரும் மணிமேகலையானும், ஏனையவற்றை முற்கூறிப் போந்த
மேற்கோள்களானு முணர்க                                (17)


18.    உண்டி கொடுத்தலின் உயர்வு

துற்றுள வாகத் தொகுத்து விரல்வைத்த
  தெற்றுக் கஃதென்னி னிதுவதன் காரணம்
அற்றமில் தான மெனைப்பல வாயினும்
துற்றவிழ் ஒவ்வாத் துணிவென்னு மாறே.

     (இ - ள்.) துற்று உளவாகத் தொகுத்து விரல்வைத்தது - (துறவியாகிய)
நான். சோற்றினை மிகுதியாக ஏற்றுக் கையிலேந்தி வருதல்
கண்டு;
அஃதெற்றுக்கெனின் - அங்ஙனம் செய்வதற்குக் காரணம் என்னையோ? இ
என்பாயாயின், அற்றம் இல் தானம் எனைப்பல ஆயினும்- குற்றமில்லாத
தானப் பொருள்கள் எத்துணையும் பலவாயவிடத்தும்; துற்று அவிழ்
ஒவ்வாத்
துணிவு
என்னும் ஆறே-அவையெல்லாம் உண்ணும் சோற்றிற்கு நிகராகா
என்பது தெளிவான முடிவு. இது அதன் காரணம் - இதுவே
அங்ஙனம்
செய்தற்குக்
காரணமாம் என்பதாம்.

     (வி - ம்.)
வளையாபதி என்னும் பெருங்காப்பியங் கூறும்
கதையினையாம் சிறிது மறிகின்றிலேம் ஆயினும் இச் செய்யுள் யார் கூற்று
எந்தச் செவ்வியிற் கூறப்பட்டிருக்கலாம் என்று ஊகித்துணர்ந்து இங்ஙனம்
உரை கூறினாம்.