மிகையாய
மானத்தையும் விலக்குவீராக!: இவை பொருளாக் கொண்டு
போற்றுமின் - இவ்வறங்களை உறுதிப் பொருளாகக் கருதிப் பேணி
வாழ்வீராக!; என்பதாம்.
(வி
- ம்.) எவ்வுயி்ர்க்கும் அருள் செய்க! அறங்களையே
யாவர்க்கும்
அறிவுறுத்துக! தீவினையை அஞ்சுக ! வஞ்சகத்தையும் மாண்பிறந்த
மானத்தையும் விலக்குக. இவ்வறங்களையே பொருளாகப்
பேணி நல்வாழ்வு
வாழ்வீராக ! என்றவாறு.
(வி
- ம்.) அருள் - தொடர்பு பற்றாது இயல்பாக
எல்லாவுயிர்கண்மேலும் செல்வதாகிய இரக்கம்.
“அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள” --குறள், 241
எனவும்,
“நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை” --குறள், 242
எனவும்,
“அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
வின்னா வுலகம் புகல்” --குறள், 243
எனவும்,
“ மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை” --குறள், 244
எனவும்,
“அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி” --குறள், 245
எனவும்,
“அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு” --குறள், 246
எனவும் வருகின்ற திருக்குறள்களான் அருளறத்தின் மாண்புணர்க.
தூற்றுமின் என்றது, யாண்டும் யாவர்க்கும் அறிவுறுத்துமின்
என்பதுபட நின்றது. தோம் - குற்றம் ; தீவினை.
இனி, தீவினையை நயந்து செய்யற்க வென்பார்
நனிதுன்னன்மின்-தீவினை தீயவே பயத்தலான் அதனைத்
துன்னாமையே உயிர்க்குறுதியாயிற்று என்றார்.
இதனை,
“அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யா னெனின்” --குறள், 210
என்பதனானும், உணர்க.
|