பக்கம் எண் :

28

இன்னும்,

         “தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
          வீயா தடியுறைந் தற்று”  
               --குறள், 208

எனவும்,

         “தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந்
          துன்னற்க தீவினைப் பால்”
             --குறள், 209

எனவும்,

         “தீயவை தீய பயத்தலால் தீயவை
          தீயினும் அஞ்சப் படும்”  
              --குறள், 208

எனவும் வருந் திருக்குறள்களையும் நினைக,

     மாயம் - வஞ்சம்; பொய்யுமாம். கழிமானம் என மாற்றுக. கழிமானம்
- மாண்பிறந்த மானம். அஃதாவது--

     அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை
தாயரென்றிவரை வணங்காமையும், முடிக்கப்படாதாயினும் கருதியது
முடித்தே விடுதலும் முதலாயின. பொருளா : ஆக்கச்சொல்லீறு
கெட்டது. செய்யுள் விகாரம்.                  
                                    (19)


20.            இதுவுமது

பொருளைப்பொருளாப் பொதிந்தோம்பல் செல்லா
  தருளைப் பொருளா வறஞ்செய்தல் வேண்டும்
அருளைப் பொருளா வறஞ்செய்து வான்கண்
இருளிலியல் பெய்தாத தென்னோ நமரங்காள்.


     (இ - ள்.) நமரங்காள் - எஞ்சுற்றத்தீரே !; பொருளைப் பொருளாப்
பொதிந்து ஓம்பல் செல்லாது - செல்வப் பொருளை மிகவும் ஈட்டுதலே
மாந்தர்க்கு உறுதிப் பொருளாவது என்று கருதி அவற்றைக் கட்டிவைத்துக்
காத்திராமல்; அருளைப் பொருளா அறஞ்செய்தல் வேண்டும் - அருளையே
உறுதிப்பொருளாகக் கருதி அப்பொருளாலே நல்லறங்களைச் செய்தல்
வேண்டும். அஃதே அறிவுடைமையாம்; அருளைப் பொருளா அறஞ்செய்து
- நீர் பொருளீட்டுகின்றீராயினும், அருளையே உறுதிப் பொருளாக வுணர்ந்து
அப்பொருளாலே அறங்களைச் செய்து; வான்கண் - அவ்வறத்தின்
பயனாகிய மேனிலையுலகவாழ்வினைப் பெற்று; இருள்இல் இயல்பு எய்தாதது
என்-அங்கு ஒளியுடைய பண்பினையடைய முயலாமைக்குக் காரணம்
என்னையோ? இன்னே அறஞ் செய்மின்! என்பதாம்.


     (வி - ம்.) பொருள் - செல்வப் பொருள். அவை பொன் மணி நெல்
முதலியன. பொருளாக எனல் வேண்டிய ஆக்கச்சொல் ஈரிடத்தும்