(இ
- ள்.) அவா விலையில் உண்பான் - ஊனுண்ணும்
அவாவினாலே
அதனை விலைகொடுத்து வாங்கித் தின்பவன்றானும் ; புலால் பெருகல்
வேண்டும் - அந்த ஊனுணவு நாடோறும் மிகுதியாக வருதலையே
விரும்புவான் ; வலைவிலங்கு புகா ஆய்ப்பொறாது
- தான் வலையிற் பிடித்த
விலங்குகளே தனக்கு உணவாகவும் அத்துணையின் அமைதியுறாமல் ; விலை
அவாவில் - மேலும் விலைப் பொருள் பெறுகின்ற அவாக் காரணமாக ;
பிறகொன்று ஊன் விற்பானும் - பிற வுயிரினங்களைக் கொன்று அவற்றின்
ஊன்களைக் கொணர்ந்து விற்பவனும் ; ஆண்டதுவே வேண்டும் -
அவ்விடத்து அவ்வூன் மிகுதியும் கிடைப்பதனையே விரும்புவான் ;
உயிர்கொல் வானின் பாவம் மிகாமை இலை - ஆதலால் உயிரைக்
கொல்பவனிடத்துப் போலவே தீவினை இவர்களிடத்தும் மிகுவதாம்.
தகாது-ஆகவே விலைப்பாலில் ஊன் கொண்டுண்ணல் அறவோர்க்குத்
தகாத செயலாம் என்றவாறு.
ஊன் உண்ணும் அவாவினாலே ஊன் உண்பவன்
அவ்வூன் உணவு
மிகுதியாகக் கிடைத்தலையே விரும்புவான். ஆகவே அவன் கொலைக்குடன்
பட்டானாகிக் கொன்றவனே ஆகின்றான். என்னை ? ஊன் விற்பவனும்
அங்ஙனமே ஊன் மிகுதியாகக் கிடைப்பதனையே விரும்பிக் கொல்கின்றான்.
ஆதலால் கொல்பவனுக்குத் தீவினை மிகுவது போலவே உண்பவனுக்கும்
மிகுதல் ஒருதலை. ஆதலால் ஊனுண்ணல் தகாது என்பதாம். ‘ஆண்டருகல்
வேண்டும்’ என்பது பாட வேறுபாடு.
இனி,
“தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்” --குறள், 256
என வள்ளுவனார் கூறுதலும் காண்க. இனி, இக்கருத்தினை,
“வெற்றுடம் புண்பதும் வேலின் விளிந்தவை
தெற்றென வுண்பதுந் தீமை தருமென்னை
யொற்றை நின்றாடுணை யூறு படுத்தவட்
குற்றமன்றோ சென்று கூடுவ தேடா” --நீலகேசி, 332
என்றற்றொடக்கத்து நீலகேசிச் செய்யுள்களானும் அவற்றிற்கு யாம்
வகுத்துள்ள உரைப்பகுதிகளானும் நன்குணர்க.
இன்னும்,
“உகுநெற் பலகூட்டி யுண்டி முடிப்பான்
மிகுநெல் லுதிர்வதனை வேண்டும்--தகவுடையோ
ருண்ணாப் படுமுடையை யுண்பானுயி்ர் மரண
மெண்ணாத வாறுண்டே யிங்கு”--ஷை
உரைமேற்கோள்,
எனவரும் வெண்பாவானும் உணர்க. (21)
|