23. |
செவியறிவுறூஉ
உயிர்க ளோம்புமி னூன்விழைந் துண்ணன்மின் |
|
செயிர்க
ணீங்குமின் செற்ற மிகந்தொரீ இக்
கதிக ணல்லுருக் கண்டனிர் கைதொழு
மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர். |
(இ
- ள்.)
உயிர்கள்
ஓம்புமின்-எல்லாவுயிர்களையும் அருள் கூர்ந்து
காப்பாற்றுவீராக!; ஊன் விழைந்து உண்ணன்மின்- பிறவுயிரினங்களின்
ஊனை விரும்பி உண்ணற்க; செற்றம் இகந்து ஒரீஇ -வெகுளியைத் துவர
விலக்கி; செயிர்கள் நீங்குமின் - காம முதலிய குற்றங்களினின்றும் நீங்கி
வாழுவீராக; கதிகள் நல்லுருக் கண்டனிர் - இவ்வாறு வாழ்வீராயின்
மேல்வரும் பிறப்புக்களிலே மேனிலை யுலகங்களிலே தேவர் முதலியோராய்
அழகிய உருவங்களை அடைந்து; கைதொழுமதிகள் போல-உலகத்தார் கை
குவித்துத் தொழுகின்ற குளிர்ந்த நிறைத் திங்கள் போன்று; மறுவிலிர்
தோன்றுவீர்- குற்றமில்லாதவர்களாய் அருள் நிரம்பிப் புகழொடு விளங்குவீர்
என்பதாம்.
(வி
- ம்.) உயிர்களை
ஒம்புதலாவது - சோர்ந்தும் கொலைவாராமல்
குறிககொண்டு உயிர்களைப் பாதுகாத் தொழுகுதல். இவ்வறமே நூலோர்
தொகுத்த அறங்களுள் தலைசிறந்த அறமாதல் பற்றி முற்பட ஒதினர்.
என்னை?
“பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை” --குறள், 322
எனவரும் திருக்குறளும் நோக்குக. வேள்வி முதலியவற்றிற் கொன்று
ஊனுகர்தல் நல்லறமே என்னும் மடவோரும் உளர் ஆகலின் நீயிர்
விழைந்து எவ்வாற்றானும் ஊனுண்ணாதொழிமின், உண்பீராயின் நரகத்து
வீழ்ந்து நலிகுவி்ர் என்பார் விழைந்து ஊன் உண்ணன்மின் என்றார். இதனை,
“நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை” --குறள்,
328
எனவும்,
“உண்ணாமை-யுள்ள துயிர்நிலை யூனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு” --குறள்,
355
எனவும் வரும் குறள்களானு முணர்க.
செற்றம் - வெகுளி. செயிர்-காம முதலிய ஆறுவகைக் குற்றங்களும்
ஆம். தீவினை பிறத்தற்கெல்லாம் வெகுளியே தலைசிறந்த காரணமாகலின்,
செயிர்கள் நீங்குமின் என்றொழியாது அதனைத் தனித்தெடுத்தும் ஓதினர்.
இவ்வாறெல்லாம் நாடொறும் நல்லறம் பேணி வாழுதிராய
|