“தன்னுயிர்
தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்” --குறள்,
218
எனவும்,
“மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின்” --குறள், 210
எனவும் வருந் திருக்குறள்களானும் உணர்க.
இன்னும் சைவர் முதலிய பிற சமயத்தாரும் இங்ஙனமே கூறுதலை,
“தேசமிடம் காலந்திக் காசனங்க ளின்றிச்
செய்வதொன்று போல்செய்யாச் செயலதனைச் செய்தங்
கூசல்படு மனமின்றி யுலாவ னிற்ற
லுறக்கமுணர் வுண்டிபட் டினியிருத்தல் கிடத்தல்
மாசதனிற் றூய்மையினின் வறுமை வாழ்வின்
வருத்தத்திற் றிருத்தத்தில் மைதுனத்திற் சினத்தி
னாசையினின் வெறுப்பினிவை யல்லாது மெல்லா
மடைந்தாலு ஞானிகடா மரனடியை யகலார்”
--சிவ - சித்தி, 285
எனவும்,
“நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
நாகமுழை புக்கிருத்துத் தாகமுதற் றவி்ந்தும்
நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும்
நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பின்
ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே யிடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்துமிறை ஞானங்
கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக்
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே யிருப்பர்.”
--சிவ- சித்தி, 308
எனவும்,
“சாக்கிரத்தே யதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற்
சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்க ளிவர்கள்
பாக்கியத்தைப் பகர்வதுவெ னிம்மையிலே யுயிரின்
பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ
|