இவற்றை
; நிரலே,
“பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானா மாணாப் பிறப்பு” --குறள், 351
எனவும்,
“இருணீங்கி இன்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு” --குறள், 352
எனவும்,
“அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லா மொருங்கு” --குறள், 343
எனவும்,
“நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன்” --குறள், 371
எனவும்,
“வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது” --குறள், 377
எனவும்; (குறிப்பு-இவ்விரண்டும் விரும்பு வெறுப்பினீங்கற்கு
வேண்டுவன)
“அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு
இவ்வுலக மில்லாகி யாங்கு” --குறள், 347
எனவும் வரும் திருக்குறள்களானுமுணர்க. (25)
26. |
இணைவிழைச்சு
எண்ணின்றி யேதுணியு மெவ்வழி யானு மோடும் |
|
உண்ணின்று
ருக்கு முரவோருரை கோட லின்றாம்
நண்ணின்றி யேயு நயவாரை நயந்து நிற்குங்
கண்ணின்று காம நனிகாமுறு வாரை வீழ்க்கும். |
(இ
- ள்.)
காமம்-காமமானது; எண் இன்றியே துணியும் - ஆராய்தல்
சிறிது மின்றியே செயல் செய்யத் துணியும் ; எவ்வழி யானும் ஓடும் - நல்வழி
தீயவழி என்று நாடுதலின்றி எந்தவழியினும் விரைந்து செல்லும் ; உள் நின்று
உருக்கும்-தான் விரும்பியவாறு இன்பந் துயத்தற்கிடையூறு நேர்ந்தவிடத்து
நெஞ்சத்தின் கண்ணின்று நலிந்து உள்ளத்தையும் உடம்பினையும்
மெலிவிக்கும் ;உரவோர் உரைகோடல் இன்று ஆம் - அறிஞர் கூறும்
அறவுரைகளைச் சிறிதும் பேணுதலும் இல்லையாகும் ; நண்ணின்றியேயும் -
|